ரெடிமேற் முப்திகளுக்கு..! » Sri Lanka Muslim

ரெடிமேற் முப்திகளுக்கு..!

625.0.560.320.160.600.053.800.700.160.9054

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


சூறாவளி,பயங்கரவாதம்,சுனாமி என்று தொடராக கிழக்கு மண் சோதிக்கப்பட்ட போதெல்லாம் கிழக்குக்கு வெளியே சில ரெடிமேற் முப்திகள் தோன்றினார்கள்.

அடிமேல் அடிவிழுந்து ஆடிப் போயிருந்த மக்களின் இதயங்களைத் தங்களின் மனிதாபமற்ற பேச்சுக்களால், எழுத்துக்களால் கீறிக் கிழித்தார்கள்.

*உங்கட ஊர்கள்ள சீதனம் வாங்கிறவா! அய்த்தான் அள்ளாஹ்ட தண்டனை இறங்குது.

*உங்கட ஏரியா ஆட்கள் அள்ளாஹ்ட பாதைல போறல்ல. அது சுட்டித்தான் இப்படி நடக்குது.

*ஊருக்குள்ள சிர்க், பித்அத் நடக்கிறத தடுக்கல்ல. அதுதான் இப்பிடி

*இவ்வளவு பிரச்சினை நடந்தும் நீங்கள்ளாம் திருந்த மாட்டீங்களா?

இப்படிக் குத்திக் குதறிய கேள்விகளால் எப்படி வலி வருமென்பதை அனுபவித்த ஆட்களுக்குத்தான் புரியும்.

இப்போது இதை ஏன் எழுத வேண்டும்?

இப்போதும் சில இன்ஸ்டண்ட் முப்திகள் உருவாகி இருக்கிறார்கள்.
ஆனால் கிழக்குக்கு வெளியே அல்ல. மலை நாட்டுக்கு வெளியே.

இனவாதிகள் ,இழிந்தவர்கள் நடத்திய தாக்குதல்களால் நொந்து போய் இருக்கும் முஸ்லிம்களை நோக்கி பத்வாக்களை பறக்க விடுகிறார்கள்.

அதே கேள்விகள். அதே கொடுமையான வார்த்தைகள்.

கேள்வி கேட்பவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

*இது தண்டனையா அல்லது சோதனையா என்று உங்களுக்கு அறிவித்தது யார்?

*எதை எங்கு எப்படிச் சொல்லவேண்டுமென்று இஸ்லாம் போதிக்கவில்லையா?

*நொந்து போயிருக்கும் இதயங்களை நொறுக்கி விடுவதால் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

உங்கள் பத்வாக்கள் வெறுப்புக்களை மாத்திரமே ஏற்படுத்தும். பால் கேட்டு அழும் பிள்ளைக்கு பல் துலக்கும் முறை பற்றி உபதேசிக்கச் செல்லாதீர்கள்

முதலில் அவர்களின் வாழ்வுக்குக் கை கொடுப்போம். பின்னர் பிறவற்றை நோக்குவோம்.

அள்ளாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

Web Design by The Design Lanka