ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் போட்டி » Sri Lanka Muslim

ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் போட்டி

cr.jpg2.jpg3

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை, ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (14) கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான டொக்டர் ஹில்மி தலைமையில் நடைபெற்றது.

மொறவெவ பிரதேசத்தில் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவோம் எனும் நோக்கில் ஷாபி விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகரான எச்.ரம்ஸீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பத்திற்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.

இக்கிரிகெட் சுற்றுப்போட்டியில் 10 அணிகள் பங்கு பற்றியதுடன் இறுதி போட்டிக்கு சுபசிக்ஸ் விளையாட்டு கழகமும்,அல்ஸலாஹ் விளையாட்டுக்கழகம் தெரிவானது.

இதில் ஹில்மி வெற்றிக்கிண்ணத்தை ரொட்டவெவ அல்ஸலாஹ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது.

இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை கிண்ணியா நகர சபையின் முன்னாள் நகர பிதா டொக்டர் ஹில்மி வழங்கி வைத்ததுடன் சிறந்த வீரர்களுக்கான கிண்ணத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் மற்றும் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எச்.யசீர் ரொட்டவெவ ஷாபி விளையாட்டு கழகத்தின் ஆலோஷகர் எச்.ரம்ஸீன்.ஆர்.தாஸீம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

cr cr.jpg2 cr.jpg2.jpg3 cr.jpg2.jpg3.jpg4

Web Design by The Design Lanka