ரோகித் ஷர்மா, ஷிகார் தவானை பின்தள்ளிய மிஸ்பா உல் ஹக் - Sri Lanka Muslim

ரோகித் ஷர்மா, ஷிகார் தவானை பின்தள்ளிய மிஸ்பா உல் ஹக்

Contributors

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, ஷிகார் தவானை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் தலைவர் மிஸ்பா உல் ஹக் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2013ல் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 4 சதம், 7 அரை சதம் உட்பட 1237 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

சக இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் 2வது, 3வது இடத்தில் இருந்தனர். பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் 4வது இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவுடன் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்கள் விளாசிய மிஸ்பா உல் ஹக் மொத்தம் 1223 ஓட்டங்களுடன் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் இந்திய வீரர்கள் 3 ஒருநாள் போட்டிகளிலும், மிஸ்பா உல் ஹக் 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளதால் முதல் இடத்தை பிடிப்பதற்கு இந்த வீரர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team