ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பயங்கர தீ..! - Sri Lanka Muslim

ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பயங்கர தீ..!

Contributors
author image

Editorial Team

வங்க தேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்ஸ் பஜாரின் உக்கியாவில் உள்ள பலுகாலி ரோஹிங்கியா முகாமிலே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் பல காணவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீ முதலில் முகாமின் ஐ பிளாக்கில் ஏற்பட்டதாகவும் பின்னர் தொடர்ந்து பி மற்றும் சி பிளாக்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவயிடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகங்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த முகாமில் கிட்டதட்ட 5000 ரோஹிங்கியா முஸ்லிம் குடும்பங்கள் தங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்க தேசத்தின் காக்ஸ் பஜாரின் வெவ்வேறு முகாம்களில் சுமார் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஆகஸ்ட் 25, 2017 முதல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team