ரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி » Sri Lanka Muslim

ரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி

roh

Contributors
author image

Editorial Team

மியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற லோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியன்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து இவ்வாறு ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்கின்றனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை நப் நதியில் பல ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுடன் பயணித்த படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் போது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த படகில் குறைந்தது குழந்தைகள் உட்பட 100 பேர் பயணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, குறித்த படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை.

பங்களாதேஷ் எல்லையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த படகில் 40 முதல் 100 பேர் வரை பயணித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதுவரை பத்து குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka