ர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு மறைக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் தவறானது » Sri Lanka Muslim

ர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு மறைக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் தவறானது

ulama

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் இணைய‌த்த‌ள‌த்தில் ச‌ம்மாந்துறையை சேர்ந்த‌ ர‌ம்சீன்  காரிய‌ப்ப‌ர் என்ற‌ மௌல‌வி அவ‌ர்க‌ள் ஹ‌க்கீம் மீதான‌ இக்குற்ற‌ச்சாட்டு ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும் என‌ கூறியுள்ளார்.

 இது இஸ்லாத்தின் பார்வையில் த‌வ‌றான‌ க‌ருத்தாகும்.
விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு முன் வைக்க‌ப்ப‌டும் போது அத‌ற்குரிய‌ க‌ண்ணால் க‌ண்ட‌ சாட்சி வேண்டும் என்ப‌தெல்லாம் நாம் அறிந்த‌தே.

ஆனால் ஒருவ‌ர் அதுவும் முஸ்லிம் ஒருவ‌ர் விப‌ச்சார‌ம் செய்தார் என்ப‌தைக்க‌ண்ட‌ ஒரு முஸ்லிம் அத‌னை நிரூபிக்கும் சாட்சிய‌ங்க‌ள் த‌ன்னிட‌ம் இருக்கும் நிலையில் அத‌னை ம‌றைப்ப‌தை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா அல்ல‌து அத‌னை நீதியிட‌ம் கொண்டு செல்ல‌ வேண்டும் என்கிற‌தா?

மேற்ப‌டி மௌல‌வியின் க‌ருத்துப்ப‌டி ஒரு முஸ்லிம் த‌வ‌று செய்தால் அத‌னை ம‌றைக்க‌ வேண்டும் என்கிறார். அப்ப‌டியாயின் ஒரு முஸ்லிம் இன்னொருவ‌ரை கொலை செய்தால், கொள்ளைய‌டித்தால் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்தால், ஊழ‌ல் செய்தால், திருடினால் அதைப்ப‌ற்றி பேசாம‌ல் இருப்ப‌வ‌ருக்கே சொர்க்க‌ம் கிடைக்கும் என‌ இஸ்லாம் சொல்லியுள்ள‌தா? அவ்வாறாயின் குற்ற‌ங்க‌ளுக்கும் குற்ற‌வாளிக‌ளுக்கும் துணையாக‌ இருப்ப‌தையா இஸ்லாம் விரும்புகிற‌து?

இது இஸ்லாம் தெரியாம‌ல் த‌ம‌து த‌லைவ‌ர்க‌ளை காப்ப‌த‌ற்காக‌ சொல்ல‌ப்ப‌டும் இஸ்லாத்துக்கு மாற்ற‌மான‌ க‌ருத்தாகும்.
என்ன‌ குற்ற‌ம் நிக‌ழ்ந்தாலும் அத‌னை காணும் முஸ்லிம் அத‌னை த‌டுத்து நிறுத்த‌ வேண்டும் என்றும் குற்ற‌வாளிக‌ளை நீதியின் முன் நிறுத்த‌ வேண்டும் என்றும் இஸ்லாம் முஸ்லிம்க‌ளை க‌ட்டாய‌ப்ப‌டுத்தியுள்ள‌து.

 இந்த‌ வ‌கையில் ஹ‌க்கீம் மீதான‌ குற்ற‌ச்சாட்டு ச‌ரியா இல்லையா என்ப‌த‌ற்க‌ப்பால் குற்ற‌ம் ந‌ட‌ந்த்தாக‌ ஒருவ‌ர் குற்ற‌ம் சாட்டினால் முத‌லில் உல‌மாக்க‌ள் அந்த‌ குற்ற‌ச்சாட்டை ஏற்று அத‌னை விசாரிக்க‌ வேண்டும் என்ப‌தே இஸ்லாம் நீதியின் மீதும் ச‌மூக‌த்த‌லைம‌க‌ளான‌ உல‌மாக்க‌ள் மீதும் சும‌த்தியுள்ள‌து.

அத‌ன் பின் தீர்ப்ப‌ளிப்ப‌த‌ற்கு முன்பு குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ரிட‌ம் கேட்க‌ வேண்டும். குற்ற‌ம் சாட்டிய‌வ‌ர் நான்கு சாட்சிக‌ள் அல்ல‌து அத‌ற்கு நிக‌ரான‌ வீடியோ ப‌திவுக‌ள் அல்ல‌து பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரின் வாய் மூல‌ம் போன்ற‌வை மூல‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்டால் குற்ற‌வாளிக்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும். த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ அதிகார‌ம் இல்லாத‌ போது குற்ற‌வாளியை ச‌மூக‌ப்பொறுப்பிலிருந்து ஓர‌ம் க‌ட்ட‌ வேண்டும்.
இதுதான் இஸ்லாம் காட்டும் குற்ற‌விய‌ல் ஷ‌ரீயாவாகும்.

அவ்வாறின்றி சாமானிய‌ ம‌க்க‌ள் த‌ப்பு செய்தால் மிம்ப‌ரில் வைத்து அவ‌ர்க‌ளை தோலுரிப்ப‌தும் த‌ம‌க்கு பிடித்த‌ த‌லைமைக‌ள் த‌ப்பு செய்தால் அவ‌ற்றுக்காக‌ வ‌க்கால‌த்து வாங்குவ‌தும் உல‌மாக்க‌ள் செய்லாக‌ இருக்க‌ முடியாது.

– முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி

Web Design by The Design Lanka