ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்..! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

Contributors

ஏ.எல்.தவம்

சகோ. றிசாட் தடுப்புக்காவலில் நோன்பு பிடிக்கவே சரியான வசதியில்லாத நிலையில் இருக்கிறார். அவரது விடுதலை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் – றிசாட்டை நோன்புடைய காலத்தில் கைதுசெய்தவர்களோடு எம்.பிக்கள் அலறி மாளிகையில் ஆடம்பரமாக நோன்பு திறக்கிறார்கள்.

றிசாட்டை பாராளுமன்றத்திற்கு கூட்டி வருவதில் சட்டச் சிக்கலில்லை என சட்டமா அதிபர் கூறிய பின்னரும் – கூட்டி வர அனுமதிக்க முடியாது என – அரசாங்க அமைச்சரும் சபாநாயகரும் மறுக்கின்ற போது – அதனை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத மனச்சாட்சி இல்லாதவர்கள் – மகிந்தவோடு தேன்னிலவு கொண்டாடுகிறார்கள்.

ஆசாத் சாலியும் ஹஜ்ஜுல் அக்பரும் இன்னும் அப்பாவிகள் எத்தனையோ பேரும் – நோன்பில் ஏந்தும் கையை அல்லாஹ் நிராசையாக்க மாட்டான். அநியாயக்காரர்களோடு சேர்ந்து நீங்கள் எல்லோரும் ஆடும் ஆனந்தக்கூத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.

நோன்பு காலம் என்றும் பார்க்காமல் நிகழ்ந்த அத்தனை கைதுகளையும் அமைதியாக பார்த்துக்கொண்டும் – புர்கா தடைக்கான அமைச்சரவை அங்கீகாரத்தை தெரிந்துகொண்டும் – உணர்ச்சியேயில்லாமல் இவர்களால் எப்படி இப்படியொரு இப்தாரை ஜீரணிக்க முடிகிறது? கலந்துகொள்ள முடிகிறது?

✅ இப்தாருக்கு வருகிறோம்;
👉🏿 நோன்பு காலம் கைதுகளை நிறுத்தச் சொல்லுங்கள்.
👉🏿 றிசாட்டை விடுதலை செய்யச்சொல்லுங்கள்.
👉🏿 ஆசாத் சாலையையும், ஹஜ்ஜுல் அக்பரையும் கூட விடச்சொல்லுங்கள் – அப்படி இல்லாது நாங்கள் இப்தாருக்கு வந்தால் எமது சமூகம் பழிசொல்லும் – அதிலும் ஆட்கள் கூடும் இப்தார் நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ள இந்த காலத்தில் வந்தால் இன்னும் நிலைமை மோசமாகும் என்று – எல்லோரும் சேர்ந்து மொத்தமாக சொல்ல இவர்களுக்கு மனம் வரவில்லையே.

இவர்கள் எப்படிச் சொல்வார்கள்?
👉🏿 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே 20 க்கு கையுயர்த்தியவர்களாச்சே…
👉🏿 பின்னர் எரிக்கப்பட்டது ஜனாஸாக்களல்ல – வெறும் பெட்டிகள் என்று கூறியவர்களாச்சே…
👉🏿 சமூக நம்பிக்கைக்கு மாற்றமாக – 20 க்கு கையுயர்த்தி துரோகம் செய்துவிட்டு – அதனை வியூகம் என்று மக்களை ஏமாற்றியவர்களாச்சே…

இவர்களிடமிருந்து இப்படி ஒரு விடயத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.

அப்படி எண்ணியதற்கே என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team