அறுகம்பை ஆட்டோ உரிமையாளர் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு - Sri Lanka Muslim

அறுகம்பை ஆட்டோ உரிமையாளர் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு

Contributors
author image

சலீம் றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலா துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்ற பொத்துவில் அறுகம்பை ஆட்டோ உரிமையாளர் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயம் அறுகம்பை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

ஆட்டோ உரிமையாளர் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவர் ஜனாப். முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்;ந்ததாக மிக கோலகலமாக இடம் பெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து ஆட்டோ சங்கத்தின் காரியாலயத்தை திறந்து வைத்தார்.

 

இங்கு வருகை தந்த பிரதம அதிதி, கௌரவ அதிதி மற்றும் ஏனைய அதிதிகள், நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் சுற்றுலா பயணிகளால் மாலை அணிந்து வரவேற்கப்பட்டனர்.

 

இதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி.வி.கருணநாதன் , நீர்ப்பாசன மாகாணப் பணிப்பாளர் எந்திரி. எஸ்.திலகராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பாளர்

 

எந்திரி.ஏ.எல்.எம்.நிசார், மாகாண பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் எந்திரி. யு.எல்.எம்.நஸார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை பிரதம பொறியியலாளர் எந்திரி எஸ்.மஹிந்தன், மத்திய நீர்ப்பாசன அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எந்திரி கே.டி. நிஹால் சிறிவர்த்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் எந்திரி.ஐ.எல்.ஏ.பாரி, அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத்,

 

பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர்(மாகாணம்) பி.ரி.ஏ.ஜெயகுமார், நீர்;ப்பாசன பொறியியலாளர்(மத்திய) டபிள்யு.யு.கே.சிரிவர்த்தன, கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சிறிசாந்த, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரனி எம்.எம்.பஹிஜ், எஸ்.எம்.சபீஸ், யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,றாசீக் உட்பட மத்திய, மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team