லங்கா சதொசயின் எந்தவொரு கிளையிலிருந்தும் ஒரு நபர் மூன்று கிலோ சீனியை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பெற முடியும் ! - Sri Lanka Muslim

லங்கா சதொசயின் எந்தவொரு கிளையிலிருந்தும் ஒரு நபர் மூன்று கிலோ சீனியை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பெற முடியும் !

Contributors

எஸ் ஜே புஹாது

லங்கா சதொசயின் எந்தவொரு கிளையிலிருந்தும் ஒரு நபர் மூன்று கிலோ சீனியை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பெற முடியும் என்று சதொச தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கூறியுள்ளார் .

சிவப்பு சீனியின் புதிய அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு 125 ரூபாய் மற்றும் வெள்ளை சீனி கிலோவுக்கு 122 ரூபாய் பெற முடியும் எனவும் தம்மிடம் போதுமானதளவு சீனி கையிருப்பு உள்ளதாகவும் சதோச தலைவர் தெரிவித்துள்ளார் .

சதோசாவிலிருந்து ஒரே நேரத்தில் வாங்கக்கூடிய சீனியின் அளவு முன்பு ஒரு கிலோவாக இருந்தது. இதனை மக்களின் நுகர்வு தேவையை கருத்திற் கொண்டு இந்த தொகை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team