லசந்தவின் கொலைக்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Sri Lanka Muslim

லசந்தவின் கொலைக்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Contributors

ஐந்து வருடங்களாகியும் சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் உண்மை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லசந்த மணிலால் விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியன்று ரத்மலானை அத்திட்டிய என்ற இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப்பிரதேசம் ரத்மலானை விமானப்படை தளம் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது.

இந்தநிலையிலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் லசந்த விக்ரமதுங்கவை சுட்டுக்கொன்றனர்.

எனினும் இதுவரை இந்தக்கொலைக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team