லஞ்ச ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ரிலீஸ்... உயர் நீதிமன்றம் உத்தரவு. - Sri Lanka Muslim

லஞ்ச ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ரிலீஸ்… உயர் நீதிமன்றம் உத்தரவு.

Contributors

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில்
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் (சி.ஐ.ஏ.பி.ஓ.சி) கொழும்பு உயர்நீதிமன்றத்தில் ரூபா 41.1 மில்லியன் என மதிப்பிடப்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்காக இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.

லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தனது குற்றச்சாட்டில், 2004 மற்றும் 2006 க்கு இடையில் அறிவிக்கப்படாத சொத்துக்கள் மூலம் அமைச்சர் இந்த குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டினார்.

குறிப்பிட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Web Design by Srilanka Muslims Web Team