லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்கக் கோரிக்கை..! - Sri Lanka Muslim

லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்கக் கோரிக்கை..!

Contributors

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவால் உயர்த்த வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிவாயு நிறுவனத்துக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 10,500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நவம்பர் மாதத்துக்குள் திறைசேரி பணத்தை வெளியிடாவிட்டால் இலங்கையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதம் காரணமாக, எரிவாயு 2,800 ரூபா வுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் விற்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team