லிட்ரோ கேஸ் விலை எதிர்வரும் 5 ஆம் திகதி குறைவடையும் - முதித பீரிஸ்! - Sri Lanka Muslim

லிட்ரோ கேஸ் விலை எதிர்வரும் 5 ஆம் திகதி குறைவடையும் – முதித பீரிஸ்!

Contributors

லிட்ரோ சமையில் எரிவாயுவின் விலையை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி குறைக்கவுள்ளதகா லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப, ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

“அண்மையில் நாம் ரூ. 50 இனால் எரிவாயு விலையை அதிகரித்திருந்தோம். நிச்சயமாக நாம் குறித்த அதிகரிப்பு தொகையிலும் பார்க்க ஒரு தொகை விலையை குறைப்போம். நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி காரியாலயம் ஊடாக எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பில் விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க 5ஆம் திகதி எரிபொருள் விலை குறைப்பு கட்டாயம் சாத்தியப்படும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் லிட்ரோ 12.5kg சிலிண்டரின் விலை ரூ. 2675 இலிருந்து, ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, லிட்ரோ 12.5kg சிலிண்டரின் உச்சபட்ச விலை ரூ. 4,860 இலிருந்து, ரூ. 4,910 (கொழும்பு) ஆக ரூ. 50 இனால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team