லிபியாவில் களஞ்சியசாலையில் வெடிப்பு : 40 பேர் பலி பலர் காயம் - Sri Lanka Muslim

லிபியாவில் களஞ்சியசாலையில் வெடிப்பு : 40 பேர் பலி பலர் காயம்

Contributors

தென் லிபியாவில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றில் வியாழக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அந்தக் களஞ்சியசாலையிலிருந்து செப்பை திருடும் முயற்சியில் ஆப்கான் குடியேற்றவாசிகள் உட்பட குழுவொன்று ஈடுப்பட்ட பின்னரே மேற்படி வெடிப்பு இடம் பெற்றுள்ளது.

சபா நகருக்கு அண்மையிலுள்ள மேற்படி ஆயுதக் களஞ்சியசாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரிபோலி நகரின் தெற்கே 650 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இந்த ஆயுத களஞ்சியசாலையில் வெடிப்பு இடம் பெற்றதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அதேசமயம் கிழக்கு நகரான பென்காஸில் இடம்பெற்ற வன்முறைகளில் 4 படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.

இதில் சலாபிஸ்ட் போராளி குழுவான அன்ஸார் அல்- ஷரியாவுடனான மோதல்களின் போது 3 கடற்படை உத்தியோகத்தர்கள் பலியானதுடன் 6 பேர் காயமடைந்திருந்தனர்.

சோதனைச் சாவடியொன்றில் வாகனமொன்றில் தேடுதல் நடத்தி அதிலிருந்த பணம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய பொலிஸார் நால்வரைக் கைது செய்ததையடுத்து மேற்படி மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

அன்றைய தினம் பெங்காஸியின் பிறிதொரு பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படை வீரர் ஓருவர் தலையில் சூட்டுக் காயத்துக்குள்ளாகி பலியானார்.

Web Design by Srilanka Muslims Web Team