லிபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை » Sri Lanka Muslim

லிபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

libiya

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

லிபியாவில் மனித ஏல விற்பனை சம்பந்தமாக அமேரிக்க ” சி.என்.என்.” தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தி தொடா்பாக கொழும்பு லிபிய துாதரகத்தின் பிரதித் துாதுவா் நசீர் எம்.அல்புரிஜானி நேற்று முன்தினம் (4) அவரது அலுவலகத்தில் வைத்து மறுப்பு தெரிவித்து ஊடக அறிக்கையையும் வெளியிட்டாா்.

இவ் விடயம் சம்பந்தமாக லிபியா நாட்டின் வெளிநாட்டு அமைச்சு ,நீதியமைச்சும் திரிப்போலியில் அமைந்துள்ள நைஜா் துாதரகமும் இணைந்து மறுப்பு அறிக்கைகளை உலக நாடுகளின் உள்ள வெளிநாட்டு அமைச்சுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பிரதித் துாதுவா் நசீர் எம். அல்புரிஜானி தெரிவித்தாா்.

அவா் மேலும் தகவல் தருகையில் –

அமேரிக்க ஊடகமான சி.என்.என். தொலைக்காட்சி லிபியாவில் மனித ஏலவிற்பனை நடந்தது. போன்று சித்தரிக்க முயற்சித்த சம்பவங்கள் சர்வதே மற்றும் ஆட்கடத்தல் மாபியாக்களினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயற்பாடாகும் என அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இக்குற்றச் செயற்பாடுகளை லிபியாவில் உள்ள தற்போதைய அரசாங்கம் அடியோடு மறுப்பதுடன் கண்டிக்கவும் செய்கிறோம். இச் செய்தி வேண்டுமென்றே பேரம் பேசும் இச் செயல் ஆட் கடத்தல் மாபியாக்களினால் உருவாக்கப்பட்டது. என்பதை சர்வதேசத்தில் ஏனைய ஊடகங்கள் உண்மையை உறுதிபடுத்தியுள்ளது.

லிபிய தேசிய ஒருங்கிணைந்த அரசு இது தொடா்பாக தீவிர விசாரனையை மேற்கொண்டதில் மேற்சொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. லிபிய ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையிலும் அத்தோடு அந்நாட்டு மக்கள் மனித நேயத்தை மதிக்கும் மக்கள். என்ற வகையிலும், மனித உரிமைகளையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் கடைபிடிப்பவா்கள் என்ற வகையிலும், மனித உரிமை மற்றும் , மனிதபிமான அவமதித்தல் போன்ற அனைத்துவிதமான செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிப்பதோடு , நிராகரிக்கின்றது. லிபிய நாட்டுக்கு மணிதா்களை கடந்தி விற்றுத்தான் பிழைக்க வேண்டும் என்ற எண்னமில்லை. இது சில மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகள் லிபியாவினை மேலும் பலிக்காடாக்குவதற்கு வேண்டுமென்று திட்டமிட்டதொரு செயற்பாட்டில் ஊடகங்கள் ஊடகா பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது.

அத்துடன் நைஜா் பிரஜைகள் ஏலவிற்பனையில் விற்கப்படுவதென்ற குற்றச்சாட்டு எந்தவொறு நைஜா் பிரஜையும் லிபியாவி்ல் விற்கப்படவில்லை. இக்குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது. என்பதை நைஜா் துாதுரகமும் அறிவித்துள்ளது.

லிபியா சர்வதேச சமூகத்திடமும் குறிப்பாக ஜரோப்பா மற்றும் சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனங்களிடமும் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் அவலநிலை தொடா்பாக கடலிருந்து மீட்புப்பணி மற்றும் அவா்களை இடைத்தங்கள் முகாம்களில் அவா்களை தங்கவைப்பது மேலும் அவா்களின் நாடுகளுக்கு திருப்பியனுப்புதல் போன்ற பாரிய விடயங்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் கோரியும் ,லிபியாவே தற்பொதுள்ள கடினமான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சட்ட விரோத குடியேற்ற வாசிகளின் நலன்களில் தனிமையாகவே முகம் கொடுத்து வருகின்றது.

ஜரோப்பிய நாடுகளுக்கு பசுமையை தேடிச் செல்லும் ஆபிரிக்கா வாசிகளின் துா்ப்பாக்கிய நிலைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்கடத்தல் காரா்களுடைய செயற்பாடுகளுக்கு தீா்வுகானுமாறு மீண்டும் லிபியா வேண்டிக் கொள்கின்றது.

லிபியா சட்ட விரோத குடியேற்ற வாசிகளின் பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்புகின்றது. லிபியா ஒரு ஆபிரிக்க கண்டத்தைச் சோ்ந்த ஒரு நாடகும். அதற்கு அக்கண்டத்தின் ஏனைய நாடுகளுடனான உத்தியோகபுர்வ வா்த்தக, மற்றும் வானிப உறவுகள் உள்ளன. லிபியா தன் அயல் ஆபிரிக்க நாடுகளுக்கு வேலைவாய்ப்பு, சா்ந்தா்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சுமாா் 2 இரண்டு மில்லிய்ன ஆபிரிக்கா்கள் பல துறைகளில் பணிபுரிகின்றனா். இப்பணியாட்களுடன் பன்பாகவும், மனிதபிமானத்துடனும் நடந்து கொள்ள வேண்டியதை புதிதாக சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆயினும் லிபியானவின் பாதுகாப்பு மற்றும் நீதி போன்ற துறைகளை பலப்படுத்தி லிபிய எல்லை மற்றும் நிலத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவருவதற்கும் அனியாயக் காரா்களின் குற்றச் செயற்பாடுகளிலிருந்து தடுத்துக் கொள்வதன் தேவை லிபியாவுக்குள்ளது எனவும் துாதுரக அதிகாரி தெரிவித்தாா்.

லிபியாவில் தற்பொழுது சிறு சிறு குழுக்கள் என 17 வகையினா் இயங்குகின்றனர் அவா்களை கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவருவதற்கு லிபிய இரானுவம் பொலிசாாரும் தமது சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனா். . ஜக்கிய நாடுகளினால் அங்கிகரிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் இயங்கி வருகின்றது. லிபியா எதிா்காலத்தில் ஜனநாயக நாடாக இயங்குவதற்கு சகல அ்ரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. அவை உலக நாடுகள் ஜக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டதும் ஜனாநாயக முறையில் தோ்தல் நாடத்தப்பட்டு ஒரு புதிய பழைய லிபியா மீண்டும் புத்தெழுச்சி பெறும் எனவும் பிரதித் துாதுவா் தெரிவித்தாா். லிபிய யுத்தத்திற்கு முன்பு இலங்கை – லிபிய உறவு வா்த்தகம் உதவிகள் நீண்டகாலமாக இருந்து வந்தன. லிபியா அடுத்த ஒரு இரு வருடங்களில் புத்தெழுச்சி பெற்றதும் இலங்கை உறவினை மேலும் பலப்படுத்தப்படும்.

Web Design by The Design Lanka