லொத்தர் (கவிதை) » Sri Lanka Muslim

லொத்தர் (கவிதை)

lottery

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


அவர்கள்
அதைச் சுரண்டுகிறார்கள்
அது
அவர்களைச் சுரண்டுகிறது.

கிடைக்காமல் போன பின்
கிழித்து வீசுகிறார்கள்
வாழ்க்கையையும் சேர்த்து.

மதங்களை விட
சதங்களை விரும்பியோர்
பரிசை எதிர்பார்த்து
வரிசையில் நிற்கிறார்கள்

புத்தரை விட
லொத்தரை நம்பும்
சில பெளத்தர்கள்.
அத்தரை விட
லொத்தரை விரும்பும்
சில முஸ்லிம்கள்.
கர்த்தரை விட
லொத்தரை நாடும்
சில கிறிஸ்தவர்கள்.
சித்தரை விட
லொத்தரை மதிக்கும்
சில இந்துக்கள்

மதங்களை விட
சதங்களை நம்பி
இரண்டையும்
இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூதால்
இலட்சாதிபதியானவர்கள்
இரண்டொருவர்.
இலட்சியங்களை
இழந்தவர்கள்
ஏராளம்

இன்று விழும்
நாளை விழும் என்று
சென்று விட்டன
சில தசாப்தங்கள்
ஆனால்
அது விழவில்லை
அவர்கள் விழுந்து விட்டார்கள்
மண்ணறையில்….!

Web Design by The Design Lanka