லொஹான் ரத்வத்தையை சிறையில் அடைக்க வேண்டும் - மஹிந்த அமரவீர..! - Sri Lanka Muslim

லொஹான் ரத்வத்தையை சிறையில் அடைக்க வேண்டும் – மஹிந்த அமரவீர..!

Contributors

லொஹான் ரத்வத்தையை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று சிறை கைதிகளுக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் குறித்துக் கேட்ட கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

சிறைக் கைதியை நோக்கி எவராவது கைத்துப்பாக்கியைக் காட்டி முழந்தாள் இடச் செய்தால், அவர் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ள நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் பொருத்தமற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிக்கு ஏற்புடையதல்ல என்றும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team