ளுமைமிக்க அரசியல் வாதியாக ரிஷாத் பதியுதீனை கண்டேன் » Sri Lanka Muslim

ளுமைமிக்க அரசியல் வாதியாக ரிஷாத் பதியுதீனை கண்டேன்

IMG-20180104-WA0036

Contributors
author image

A.L.M.Sinas

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் போதே கல்முனை மாநகர சபைக்காக 02 ம் வட்டாரத்தில் போட்டியிடும் மருதமுனையை சேர்ந்த தொழிலதிபர்
அல்ஹாஜ் – ஏ. நெய்னா முஹம்மட் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,

கறிவேப்பிலையாக, எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்த இந்நாட்டு முஸ்லிம்களின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களும், இலட்சியங்களும் இன்றைய தலைவரினால் திட்டமிட்டு தொடர்ந்து சீரளிக்கப்பட்டு வரும் நிலையில்தான் மறைந்த மாபெரும் தலைவரின் இலட்சியங்களையும் நோக்கங்களையும் சிறிதளவேனும் மாற்றமில்லாமல் செய்து வருகின்ற ஆளுமைமிக்க அரசியல் வாதியான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களைக் கண்டேன்.

இந்த நாட்டிலே பல முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் பொது பல சேனாவும் ஏனைய சிங்கள கடும்போக்கு அமைப்புக்களும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களை மட்டும் குறிவைத்து ஏசுவதும் அவரது அமைச்சுக்குள் அடாவடியாக புகுந்து அவமரியாதை செய்வதும் ஏன் என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தேர்தலில் திடீரென நான் ஏன் களமிறங்கியுள்ளேன்? உங்களுக்கு சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.
அம்பாறை மாவட்டத்தின் கடைசி முஸ்லிம் எல்லைக் கிராமமான எமது பெரியநீலாவணை கிராமத்தின் பல தேவைகள் இதுவரை எந்தவொரு அரசியல் வாதியினாலும் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படவில்லை என்பது இப்பிரதேசத்தை சேர்ந்த உங்களுக்குத் தெரியும். சகல அரசியல் வாதிகளாலும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவே இதுவரை இப்பிரதேசம் கணிக்கப்பட்டு வருகின்றது. அதனால் இப்பிரதேசத்தில்தான் ஏராளமான அபிவிருத்திப்பணிகள் செய்யவேண்டிய தேவைகள் உள்ளன. படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற அனேகமான பட்டதாரிகள் இப்பிரதேசத்தில் உள்ளனர். கல்வியை வறுமை காரணமாக இடைநடுவில் கை விட்டுவிட்டு சுயதொழிலுக்கும் வசதியற்ற ஏழை இளைஞர்களையும் யுவதிகளையும் இப்பிரதேசத்தில் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

மருதமுனையின் வடக்குப் பிரதேசமான எமது பெரியநீலாவணை கிராமத்தில் மிக அதிகமான மண்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புதிதாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவையும், முறையாக திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்ட வீதிகளை, மீண்டும் மிகச் சிறந்த திட்டமிடலின் மூலம் புதிய வீதிகளாக மாற்றி அமைக்கவும் முழு வீதிகளுக்கும் வடிகான் அமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் காணப்படும் சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவும், இப்பிரதேசத்தில் காணப்படும் அரச வெற்றுக் காணியில் பொது நூல் நிலையத்தினுடனான ஒரு பல்தேவைக் கட்டிடம் ஒன்றை அமைக்கவும் எமது கிராமத்தின் முக்கிய தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை நவீன முறையில் அபிவிருத்தி செய்து அதற்கான தொழில் முயற்சிகளையும் நிவாரணங்களையும் அமைச்சினூடாகப் பெற்றிடவும், அதேபோல் பயிற்சி நிலையங்களை அமைத்து சிறு கைத்தொழில் பயிற்சிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுதல் போன்ற இப்பிரதேசத்தின் பலவகையான அபிவிருத்திகளை எண்ணத்தில் கொண்டே இத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

இந்த அரசியலையும் இத்தேர்தலையும் பயன்படுத்தி காசு உழைக்கும்  தேவைப்பாடு எனக்கு அறவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அல்லாஹூத்தஆலா அந்த வகையில் எனக்குப் போதிய செல்வத்தை தந்துள்ளான். பொதுப்பணத்தில் கைவைக்கும் எண்ணம் எனக்கு இருந்ததும் இல்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை. தூய அரசியல் மூலம் எமது பிரதேசத்திற்கு கிடைக்கவேண்டியதை கேட்டுப்பெறவே இக்கட்சியின் மயில் சின்னத்தில் நான் போட்டி இடுகின்றேன்.

ஆகவே ! எனது நோக்கங்களும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியும் தடையில்லாமல் என்னால் செய்யப்படும் என்று நீங்கள் என்னை நம்பினால் எமது மயில் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

Web Design by The Design Lanka