வகுப்பேற்றப்படாத மாணவி நஞ்சருந்தினார்! - காத்தாங்குடியில் சம்பவம் - Sri Lanka Muslim

வகுப்பேற்றப்படாத மாணவி நஞ்சருந்தினார்! – காத்தாங்குடியில் சம்பவம்

Contributors

-புவி றஹ்மதுல்லாஹ்-
வகுப்பேற்றப்படாத மாணவி நஞ்சருந்தினார்! அனைவரையும் வகுப்பேற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பணிப்பு!!காத்தான்குடியிலுள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சையில் போதியளவு புள்ளிகளைப் பெறாத மாணவர்களை 2014ம் கல்வியாண்டில் புதிய வகுப்புகளு
க்கு வகுப்பேற்றாது தடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் ‘வார உரைகல்’லிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு வகுப்பேற்றப்படாத மாணவியொருவர் அவமானம் தாங்காமல் நேற்று நஞ்சருந்தி உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றார் ஒருவர் தகவல் தெரிவித்தார்

காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் மகா வித்தியாலயத்தில் பல மாணவிகள் வகுப்பேற்றப்படாததை அறிந்த பெற்றோர் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரி.எம். நிஸாம் அவர்களைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.

இதையடுத்து குறித்த வித்தியாலய 2ம் நிலை அதிபருடன் தொடர்பு கொண்ட மாகாணக் கல்விப் பணிப்பாளர், போதியளவு புள்ளிகளைப் பெறாத மாணவர்களை வகுப்பேற்றாமல் தடுப்பதற்கு என்ன அதிகாரமுள்ளது? என் வினவியதுடன், உடனடியாக சகல மாணவிகளையும் புதிய கல்வியாண்டில் புதிய வகுப்புகளுக்கு வகுப்பேற்றுமாறு பணித்துள்ளதாகவும் அந்தப் பெற்றோர் மேலும் தெரிவித்தார்.
.

Web Design by Srilanka Muslims Web Team