வங்கதேசத்தில் கலவரம் - 21பலி (புகைப்படம்) - Sri Lanka Muslim

வங்கதேசத்தில் கலவரம் – 21பலி (புகைப்படம்)

Contributors

வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா (75). கடந்த 1971–ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரின்போது இனப்படுகொலைகள் நடந்தன.

குற்றங்களில் ஈடுபட்டதாக மொல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்க்கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா உள்பட 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதில் அப்துல் காதர் மொல்லா நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். 350 பொது மக்களை கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது

அதற்கு முன்னதாக வங்காள தேசத்தில் உள்ள லஸ் மிர்பூரில் கலவரம் வெடித்தது. மொல்லாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி ஜமாத் இ–இஸ்லாமி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இச்சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

கடந்த 3 நாட்களாக வங்காள தேசம் முழுவதும் பரவி வரும் கலவரத்துக்கு நேற்று நள்ளிரவு வரை 21 பேர் பலியாகியுள்ளனர்.

கலவரத்தின் பின்னணியில் எதிர்கட்சி தலைவர் கலிதா ஜியா உள்ளதாக குற்றம்சாட்டும் பிரதமர் ஷேக் ஹசீனா, ‘அப்பாவி மக்களை கொன்று அராஜகத்தில் ஈடுபடும் செயலை எதிர்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று அரசுக்கு தெரியும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

bangladesh kalavaram1

 

bangladesh kalavaram2

 

bangladesh kalavaram4

Web Design by Srilanka Muslims Web Team