வங்களாதேசத்திடம் தொடரை இழந்தது நியூசிலாந்து - Sri Lanka Muslim

வங்களாதேசத்திடம் தொடரை இழந்தது நியூசிலாந்து

Contributors

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களை எடுத்தது.

அதிகபட்சமாக ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களும் (93 பந்துகளில் 3 சிக்ஸர்; 7 பவுண்டரி) மன்றோ 85 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி, 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தின் தொடக்க வீரர் ஷம்சர் ரஹ்மான் 96 ஓட்டங்களை எடுத்து சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தார். இதனால், ஆட்ட நாயகன் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

முன்னதாக, 2 அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 43 ஓட்ட வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 40 ஓட்ட வித்தியாசத்திலும் வங்கதேசம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team