வங்காளதேசத்தில் நாடு தழுவிய போராட்டம்: ஜமாத்-இ-இஸ்லாமி அழைப்பு - Sri Lanka Muslim

வங்காளதேசத்தில் நாடு தழுவிய போராட்டம்: ஜமாத்-இ-இஸ்லாமி அழைப்பு

Contributors

 

qou141

-டாக்கா-

வங்காளதேசத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆயுதக்கடத்தல் வழக்கில், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மதியூர் ரஹ்மான் நிசாமி, உல்ஃபா தலைவர் பரேஷ் பரூவா உள்பட 14 பேருக்கு மரண தண்டனை விதித்து சிட்டகாங்க் சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

இதை எதிர்த்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி திங்கட்கிழமை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிசாமியை கொல்ல அரசு சதித்திட்டம் தீட்டி, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.” என்று கூறியுள்ளது.

 

ஜமாத்-இ-இஸ்லாமியின் இந்த பொது வேலைநிறுத்த அறிவிப்பால் வங்காளதேசத்தில் மீண்டும் அரசியல் கலவரம் உருவாகி விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team