வங்காளதேச போர் குற்ற வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்காவில் வசிக்கும் 2 பேருக்கு மரண தண்டனை! - Sri Lanka Muslim

வங்காளதேச போர் குற்ற வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்காவில் வசிக்கும் 2 பேருக்கு மரண தண்டனை!

Contributors

பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டில் போராட்டம் நடைபெற்ற போது கொலைகள், கற்பழிப்பு போன்ற அட்டூழியங்கள் நடந்தன. இதில் ஈடுபட்டவர்கள் மீது வங்காளதேச கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 8 தீர்ப்புகள் வெளியாகி விட்டன.

இந்நிலையில் 18 பேரை கொன்றது தொடர்பாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் சவுத்திரி மயூன் உத்தின், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசிக்கும் அஷ்ராபுசாமன் கான் ஆகியோர் மீது டாக்கா கோர்ட்டில் விசாரணை நடந்தது. இந்த இருவரும் விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த வழக்கை விசாரித்த டாக்கா குற்ற டிரிபுனல் கோர்ட்டு நீதிபதிகள் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் மரண தண்டனை விதித்தனர். மேலும் 2 பேரையும் நாடு கடத்தி அழைத்து வந்து தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். போர் குற்ற வழக்குகளில் இவர்களையும் சேர்த்து இதுவரையில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team