வடக்கில் அனைத்து சமூகங்களின் எதிர்காலத்தினையும் கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது – அமைச்சர் றிசாத் - Sri Lanka Muslim

வடக்கில் அனைத்து சமூகங்களின் எதிர்காலத்தினையும் கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது – அமைச்சர் றிசாத்

Contributors

வடக்கில் அனைத்து சமூகங்களின் எதிர்காலத்தினையும் கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது. கடந்த 4 வருட காலத்தில் வடமாகாணம் பெற்றுள்ள அபிவிருத்திகளை எடுத்துக்காட்ட முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

கடந்த காலத்தில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (2013.11.19) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

 

புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீறமைப்பு அமைச்சும், புனர்வாழ்வு அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர், சந்திரசிறி கஜதீர, பிரதி அமைச்சர் சந்திர சிறி முத்துகுமாரண, உள்ளிட்ட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது-

இன்று இந்த நிவாரணத்தை பெறுகின்றவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை காண விரும்புகின்றேன். கடந்த காலத்தில் இம்மண்ணில் நாங்கள் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளோம். அந்த காலத்தை மீண்டும் எம்மால் அனுபவிக்க முடியாது. 3 இலட்சம் தமிழ் மக்கள் மெனிக் பார்ம் நலன் புரி முகாமில் இருந்தனர். அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக தான் இருந்த போது மீள்குடியேற்றினேன்.

 

அதுமட்டுமல்லாமல் இக்கிராமங்களுக்கு தேவையான மின்சாரம், பாதை, பாடசாலை வசதிகள் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் தேவையோ அதனை பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்த நிலையில் இன்று இந்த மக்களுக்கு ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அவற்றை அவர்கள் தமது முதலீடாக கொண்டு வாழ்வாதார மேம்பாடுகளுக்கான தளத்தை இட வேண்டும் என வேண்டிக் கொள்வதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

 

அமைச்சர் சந்திர சிறி கஜதீர தமதுரையின் போது கூறியதாவது –

 

இனப்பிரச்சினை தீர்வுக்குமான நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தரப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினை

படுத்துவதற்கான அளுத்தத்தை கொடுக்க வேண்டியது தமிழ் மக்களது பொறுப்பாகும்.

வெறுமனே சர்வதேசத்துக்கு சென்று உணமைக்கு புறம்பான செய்திகளை கூறி இனப் பிரச்சினையை தோற்றுவிக்க முயல்கி்னறனர். கம்யுனிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் ஒரு போதும் இன ரீதியான பிளவுகளை அங்கீகரித்ததில்லை.

 

கடந்த கால யுத்தம் ஏற்படுத்திய அழவுகளிலிருந்து நாங்கள் பாடங்களை கற்றுள்ளோம். மீண்டும் அந்த நிலைக்கு நாங்கள் செல்ல முடியாது. இன்று ஜனநாயகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுளளது. இதற்கு கடந்த மாகாண சபை தேர்தல் முன்னுதாரணமாகும். இந்த தேர்தலில் எமது அரசாங்க கட்சியின் வேட்பாளர்கள் மிகவும் நேர்மையாக செயற்பட்டதை தேர்தல் கண்கானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வடக்கில் ஜனநாயக சூழ் நிலையுள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்துக் காட்டியுள்ளது என்றும் கூறினார்.

20s28

Web Design by Srilanka Muslims Web Team