வடக்கில் கைத்தொழில் பேட்டைகளை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுள்ளோம். ரிஷாட் பதியுதீன். - Sri Lanka Muslim

வடக்கில் கைத்தொழில் பேட்டைகளை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுள்ளோம். ரிஷாட் பதியுதீன்.

Contributors

வடபகுதியில் தொழிற்பேட்டைகளை அமைத்து தொழில்வாய்ப்புக்களை அதிகரித்து மக்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தற்போது ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என வணிகம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார் .

 

 

எமது முயற்சிகளுக்கு வட மாகாண சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்

 

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வணிக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சிறுகைத்தொழில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர்களின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்தார் .

 
சபையில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் வன்னியில் ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு அங்கு 1000 பேர் தொழில்புரிகின்றனர் .

 
எதிர்காலத்தில் 5000 பேருக்கு தொழில் வழங்கும் விதத்தில் வன்னியில் தொழிற்பேட்டை ஆரம்பிக்கப்படவுள்ளது . இதற்காக 20 ஏக்கர் காணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது .

 

அத்தோடு மன்னாரில் விதவைகளுக்கு நெசவுத் தொழிலில் பயிற்சிகளை வழங்கி சுயதொழி லில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் மறு வாழ்வுத்திட்டம் முன்னெடுக்கப்படுகி றது .

 
வவுனியாவிலும் தொழிற்பேட்டை ஆரம்பிக்கப்படவுள்ளது .

 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது .

 

அத்தோடு 3000 பேர் தொழில் வாய்ப்புகளை பெறும் விதத்தில் ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது .

 

 

யாழ்ப்பாணம் கிளிநொச்சியை இணைத்து நெசவுத் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது .

இதற்கு வட மாகாண சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

Web Design by Srilanka Muslims Web Team