வடக்கு கிழக்கு இணைப்பு: முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம் - Sri Lanka Muslim

வடக்கு கிழக்கு இணைப்பு: முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம்

Contributors

(விடிவெள்ளி)

அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பைப் பற்றி பேசி வரு­கி­றது. வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­பதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் கலந்து பேசாமல் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கருத்து வெளி­யி­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தின்­படி வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ர­வ­ளிக்­குமா என்­பது தொடர்பில் கருத்து வின­விய போதே ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ஒரு அர­சியல் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு கருத்து வெளி­யிட உரிமை இருக்­கி­றது. என்­றாலும் வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது முஸ்­லிம்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­தொன்­றா­கையால் முஸ்­லிம்­க­ளுடன் கலந்து பேசி அவர்­களின் அபிப்­பி­ராயம் பெறப்­பட்ட பின்பே கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட வேண்டும். கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸே கூடிய சக்­தி­யுள்ள கட்­சி­யாக இருக்­கின்­றது. எனவே கிழக்கு மாகா­ணத்தில் பெரும்­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்­களின் சிந்­த­னை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும்.

வடக்கு கிழக்கு இணை­வ­தென்றால் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தியில் தனி­ய­லகு வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான அபி­லா­ஷைகள் சிந்­த­னைகள் இருக்­கின்­றன. வட கிழக்கில் கணி­ச­மான அளவு சிங்­கள மக்­களும் இருக்­கி­றார்கள். இவர்­க­ளது நிலைமை தொடர்­பிலும் பேசித் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்து வரும் முஸ்லிம் கட்­சி­களில் பெரிய கட்சி முஸ்­லிம்­காங்­கிரஸ் என்­பதை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அறிந்து வைத்­தி­ருக்­கி­றது. என்­றாலும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கருத்து வெளி­யிடும் போது முஸ்­லிம்­களின் கருத்­துக்கள் பெறப்­ப­டா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இது தொடர்­பாக தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைப்பு விடுத்தால் முஸ்லிம் தரப்பு நியா­யங்­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் முன் வைக்க முஸ்லிம் காங்­கிரஸ் எப்­போதும் தயா­ரா­கவே இருக்­கி­றது.

கிழக்கு மாகாண சபையில் 13ஆவது திருத்தச் சட்­டத்தை பலப்­ப­டுத்­து­வது தொடர்பில் நிறை­வேற்­றி­யுள்ள பிரே­ர­ணையின் போதும் எமது கட்சி சில விடயங்கள் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறது. அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது சிந்தனைகளில் முஸ்லிம்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் என்று நம்புகிறேன் என்றார்.-

Web Design by Srilanka Muslims Web Team