வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு..! - Sri Lanka Muslim

வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு..!

Contributors

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyakarajah) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான இவர், 1984ஆம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றி வருவதாகவும், Consortium of Humanitarian Agencies அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அவர், எதிர்வரும் புதன் கிழமையின் பின்னர் தனது பதவியை பொறுப்பேற்பார் எனத் தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து உத்தியோபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Web Design by Srilanka Muslims Web Team