வடக்கு மீள்குடியேற்ற செயலணியில் நுழையும் முயற்சி வேண்டாம் » Sri Lanka Muslim

வடக்கு மீள்குடியேற்ற செயலணியில் நுழையும் முயற்சி வேண்டாம்

party

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

வடக்கு மீள்குடியேற்ற செயலணியில் தன்னையும் இணைக்குமாறு அமைச்சர் றவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.இதனை அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்மையாக எதிர்த்ததுடன் கடும் சொற்போர் தொடங்கியது இதில் ஒரு கட்டத்தில் அவரை இணைப்பதாக இருப்பின் நான் அந்த செயலணியிலிருந்து விலகுகிறேன் என்றார்.

இலங்கையில் இடம்பெயர்ந்து அதிகமாக வாழும் இனம் முஸ்லிம் இனமே,அதுவும் வடமாகாண முஸ்லிம்களே என்பது யாவரும் அறிந்த விடயமே.மீள்குடியேற்ற அமைச்சின் செயற்பாடுகளில் முஸ்லிம்கள் திருப்தி கொள்ளவில்லை.இதனை அரசு அறிந்து கொண்டதன் பிற்பாடே அமைச்சர் றிசாத் தலைமையில் மீள்குடியேற்ற செயலணியும் உருவாக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டு செயற்றிட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இங்கே எவ்வித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் வீடு கிடைக்கும் பொறிமுறை அமுலில் உள்ளது.

அமைச்சர் றிசாத் தான் மீள்குடியேற்ற அமைச்சராக இந்தபோது, மூன்று இலட்சம் தமிழ்க் குடும்பங்களை மீளக்குடியேற்றினார்.சர்வதேச அழுத்தமும் புதிய இடம்பெயர்ந்தோர்,பழைய இடம்பெயர்ந்தோர் என்ற தெளிவான கோட்டைக்கீறி முஸ்லிம் மீள்குடியேற்றத்தை பின்தள்ளியது.வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறக்கூடிய சாதக சூழ்நிலையும் அப்பிரதேசங்களில் குறைவாகக் காணப்பட்டது.சாதகமான பிரதேசங்களில் கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது.உ+ம் மன்னார் தீவு

நாளடைவில் அமைச்சரவை கைமாறியது.மீள்குடியேற்றம் மந்த கதியில் சென்றது.தமது கரத்தில் மீள்குடியேற்ற அமைச்சு இருந்தபோது முஸ்லிம் மக்களை முழுமையாக மீள்குடியேற்றி முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அவரை வெகுவாக வாட்டியது.இதே வேளை மாற்றுக்கட்சியினர் களநிலவரம் புரியாமல் றிசாத் அமைச்சராக இருந்தபோது ஏன் வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றி முடிக்கவில்லை என்ற பரப்புரையில் ஈடூபட்டனர்.இக்கருத்து மக்கள் சார்ந்தது அல்லாமல் தமது கட்சி அரசியல் பிரசாரமாக இருந்தது.

மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான சிறந்த அனுபவமும்,ஆளுமையும் அமைச்சரிடம் உண்டு.பொறியியலாளரான இவரிடம் எந்த அமைச்சைக் கொடுத்தாலும் அதனைச்சிறப்பாக செய்யும் ஆளுமை உண்டு.இதன் வெளிப்பாடே கைத்தொழில் வர்த்தக அமைச்சு தொடராக 4 தடவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவரின் ஆளுமையை ஜனாதிபதி,பிரதமர் போன்றோர் சரியாக இனம் கண்டுள்ளனர்.அண்மையில் “பெரும்பான்மை இன மக்களே சீனிக் கைத்தொழில் துறையை மீண்டும் அமைச்சர் றிசாதிடமே மீள ஒப்படையுங்கள் என ஆர்ப்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்”.இதில் அவர்கள் இலங்கை மக்களுக்கு விடுக்கும் செய்தியைப் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து மீள் குடியேற்ற செயலணியில் தன்னையும் சேர்க்க வேண்டும் என சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடிக்கும் அமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் சில கேள்விகள்.

1.உண்மையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்மீது உங்களுக்கு அக்கறை உள்ளதா ?
2.உங்கள் அமைச்சில் உள்ள உயர் பதவிகளில் எந்த ஓரு வடபுல முஸ்லிம் மகனையாவது நியமித்துள்ளீர்களா ?
3.உங்கள் கைவசமிருந்த அமைச்சுக்களின் கீழ் இவ்வடபுல முஸ்லிம் இளைஞர்,யுவதிகளுக்கு எத்தனை அரச தொழில் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் ?
4.உங்களால் வடபுல முஸ்லிம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட கிராமங்கள் எத்தனை?வீடுகள் எத்தனை?
5.நீங்கள் போராடி இம்மக்களுக்காக எத்தனை ஆயிரம் ஏக்கர் அரச காணியைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள்.?
6.எத்தனை புதிய பாடசாலைகளை நீங்கள் வடபுல முஸ்லிம்களுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளீர்கள் ?

7.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட காலம் முதல் தவறாது ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்கி வந்த வன்னிக்கு ஒரு தேசியப் பட்டியல்கூட வழங்க முடியாமல் போனது ஏன் ?

8.கடந்த பொதுத்தேர்தலில் திருகோணமலை,வன்னி போன்ற மாவட்ட மக்கள் உங்களுக்கு பாடம்புகட்டினர்.பிரநிதித்துவம் இல்லாமல் போனது.இதில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

இப்படி பலவினாக்கள் எங்களிடம் உள்ளன.ஆகவே,இவற்றைக் கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற செயலணியில் நுழையும் கனவைக்கைவிட்டு.இடம்பெயர்ந்த அமைச்சர் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்யவிட்டு அழகு பாருங்கள்.இன்று மாவட்ட அபிவிருத்திக்குழு,பிரதேச அபிவிருத்திக்குழு போன்றவற்றில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி உறுப்பினர்களை அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்கள் ஆக்கியமையால் அச்சபைகள் படும் பாடும்,காலதாமதமும் நாமறியாததல்ல.இதே நிலை மீள்குடியேற்ற செயலணிக்கும் வந்துவிடக்கூடாது.

எவ்வளவு விரைவாக மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்ய முடியுமோ,அவ்வளவு விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

Web Design by The Design Lanka