வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது - Sri Lanka Muslim

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது

Contributors

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) கொலை தொடர்பில், அவரது மனைவியும் மற்றுமொரு நபரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன

தெரிவித்தார்.

கடந்த 27 ம் திகதி புங்குடுதீவில் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.இக்கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில், இவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குடும்ப பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.-TC

Web Design by Srilanka Muslims Web Team