வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் மறைவிற்கு முஸம்மிலின் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்த பிரதேச சபை! - Sri Lanka Muslim

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் மறைவிற்கு முஸம்மிலின் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்த பிரதேச சபை!

Contributors

கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, இன்று காலை (07) காலமானார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவெளை, ஆளுநரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, வாரியபொல பிரதேச சபையின் தலைவர், செயலாளர் மற்றும் சபையின் தலைவர்கள் காட்சிப்படுத்தியிருந்த பேனரில், ராஜா கொல்லூரேயின் புகைப்படத்திற்கு பதிலாக, வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும், கொழும்பு முன்னாள் மேயருமான மொஹமட் முஸம்மிலின் புகைப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team