வட கொரியாவின் பூச்சாண்டி அமெரிக்காவிடம் பலிக்காது - டொனால்ட் ட்ரம்ப் » Sri Lanka Muslim

வட கொரியாவின் பூச்சாண்டி அமெரிக்காவிடம் பலிக்காது – டொனால்ட் ட்ரம்ப்

drump

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் யங் டெலிவிஷனில் புத்தாண்டு உரை நிகழ்த்தி னார். சுமார் 30 நிமிடங்கள் ஆற்றிய உரையில், “வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரித்து வருகிறது.அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே அந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப்படும்“ என்றார்.

அவரது இப்பேச்சு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், “அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் ஏவுகணை தயாரிக்க முடியாது. எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வடகொரியா அரசு எண்ணம் பலிக்காது” என்று தெரிவித்துள்ளார். இந்த பூச்சாண்டியை வேறு எங்கும் காட்டுமாறு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

வடகொரியாவை அணு ஆயுத நாடு என ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா பற்றி டிரம்ப் இதுவரை தனது கொள் கையை அறிவிக்காத நிலை யில் தற்போது தனது நிலை பாட்டை வெளிப்படுத்தி யுள்ளார்.

Web Design by The Design Lanka