வட கொரியாவின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க உதவுவோம்: அமெரிக்கா » Sri Lanka Muslim

வட கொரியாவின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க உதவுவோம்: அமெரிக்கா

_101305614_d9d918b4-69cb-4c3d-b28f-b9ad1e63e378

Contributors
author image

BBC

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தென் கொரிய நண்பர்களுடன் இணைந்து வட கொரியாவுடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக பாம்பியோ கூறியுள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்ததாகவும், வட கொரியாவில் இருந்து திரும்பியுள்ள பாம்பியோ கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், கிம் ஜாங்-உன்னும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

டிரம்பும், கிம்மும் முன்பு அவதூறுகளையும் அச்சுறுத்தல்களையும் ஒருவர் மீது ஒருவர் சுமத்தியபோதும், தென் கொரியாவில் நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

வட கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

”வட கொரிய தலைவர் கிம் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால், வட கொரிய மக்களின் எதிர்காலம் சமாதானமும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கும்” என வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் காங் க்யுங்-வா கூறினார்.

”அணு ஆயுதங்களை விரைவாகக் கைவிட தைரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாம்பியோ வட கொரியாவை வலியுறுத்தியுள்ளார்.

1953-ல் கொரிய போரின் முடிவுக்குப் பின்னர் மேற்குப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் கொரியா, முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்டது. ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா வளர்ந்துள்ளது.

1960களில் அரசால் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்துறையால், சாம்சங், ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு உருவாகின.

தென் கொரியா உலகின் பொருளாதார முன்னேற்றமடைந்த சிறந்த 20 நாடுகளில் ஒன்றானது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 டிரில்லியன் டாலர்களாகும்.

இதற்கு மாறாக, வட கொரியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 பில்லியின் டாலருக்கும் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகளின் பட்டியலில், 100 இடங்களுக்கு வெளியே உள்ளது.

தென் கொரிய தலைநகர் சோல்படத்தின் காப்புரிமைED JONES

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. ஆனால், முதலாளித்துவம் அந்நாட்டில் ஊடுருவி வருகிறது.

வட கொரியாவில் வாங்குவதற்குப் பொருட்கள் உள்ளன. ஆனால், அது பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலான வட கொரிய மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கே முன்னுரிமை என கிம் ஜாங்-உன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Web Design by The Design Lanka