வட மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேறக்கூடாது - முஸ்லிம்கள் தீர்மானம் - Sri Lanka Muslim

வட மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேறக்கூடாது – முஸ்லிம்கள் தீர்மானம்

Contributors

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவருகிறது. எனினும் வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்பதே அங்கு வாழும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வடக்கில் பயங்கரவாத புலிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதச் செயற்பாடு ஆகியவற்றை வடக்கு முஸ்லிம்கள் இன்னும் மறந்துவிடவில்லை. தொடர்ந்தும் வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதச் செயற்பாடுகள் தொடரவே செய்கிறது. இந்நிலையில் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி அங்கு தமிழ் மேலாதிக்கம் முஸ்லிம்களை அடக்கியாண்டுவிடக்கூடாது என்பதில் முஸ்லிம்கள் விழிப்பாக உள்ளனர்.

அதேவேளை வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென வலியுறுத்தி, அங்குவாழும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ மற்றும் முப்படைத் தளபதிகளுக்கும் கடிதங்களை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

வட மாகாணம் முஸ்லிம்களினதும் தாயகமாக உள்ள நிலையில், அங்குவாழும் முஸ்லிம்கள் இராணுவத்தை தொடர்ந்து நிலைத்திருக்க வைத்திருப்பதில் முழுஉடன்பாடு தெரிவிக்கின்ற நிலையில், அந்தப்பகுதி முஸ்லிம்களின் விருப்பத்தை அறியாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமது சுயலாபங்களுக்காக இராணுவத்தை வெளியேறுமாறு கூறுவது வடக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அடக்கியாள முற்படுவதின் தெட்டத்தெளிவான ஆதாரம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பங்கரவாத புலிகளிடமிருந்து வடமாகாணத்தை முற்றாக மீட்டெடுப்பதில் பங்காற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், இராணுவ வீரர்களுக்கு இவ்வேளையில் வடக்கு முஸ்லிம்கள் தமது நன்றியை மீண்டுமொருமுறை பதிவுசெய்யும் இவ்வேளையில் எக்காரணம் கொண்டும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றக்கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்துகின்றனர்.

மேலும் வடக்கு முஸ்லிம்களின் விருப்பத்தை அறியாது, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் வடக்கு முஸ்லிம்கள் தமது கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team