வட மாகாண அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரிக்கை! - Sri Lanka Muslim

வட மாகாண அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரிக்கை!

Contributors

வட மாகாண அரசாங்க அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம்  நிரூபிக்கப்பட்டால் தண்டனை  அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல்  இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்,

“வட மாகாணத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் மீது யாராவது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் மாகாண ஆளுநர் என்ற நீதியில் ஒழுக்கற்று விசாரணை மேற்கொள்ளப்படும்.

விசாரணையின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது தண்டனை அல்லது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படும்.

அரச உத்தியோகத்தர்கள் சேவையின் நிமிர்த்தம் இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள். அவர்களின் இடமாற்றம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் விசேட சேவை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்.

மாகாண இடமாற்றங்கள்  நியமனங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுமே அல்லாமல் ஒழுக்காற்று விசாரணையால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாது.

ஆளுநரால் மேற்கொள்ளப்படும் அதி விசேட சிறப்பு தர அதிகாரிகளின் நியமனத்தை ஆளுநரால் திரும்ப பெற முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team