வட மாகாண சபைக்கு 17 பில்லியனும், கிழக்குக்கு 15 பில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு! » Sri Lanka Muslim

வட மாகாண சபைக்கு 17 பில்லியனும், கிழக்குக்கு 15 பில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு!

north east

Contributors

2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2014 ஆம் ஆண்டில் அரச செலவீனம் 1542 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 253 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்காக 1100 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka