'வதந்திகளில் உண்மையில்லை' - ஹர்ஷ டி சில்வா! - Sri Lanka Muslim

‘வதந்திகளில் உண்மையில்லை’ – ஹர்ஷ டி சில்வா!

Contributors

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக சிலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அந்த வதந்தியில் உண்மையில்லை எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (09) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தலைவருடன் நாங்கள் உடன்படுகிறோம். நாம் நம் நாட்டுக்காக உழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது பற்றி நான் பேசவில்லை. பலமான குழு அமைப்பின் ஊடாக இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். அத்தோடு கூடிய விரைவில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team