வயிற்றோட்ட வியாதிக்கு ஆளாகி விடாதீர்கள் - இது அதாவுல்லாஹ்வுக்கு » Sri Lanka Muslim

வயிற்றோட்ட வியாதிக்கு ஆளாகி விடாதீர்கள் – இது அதாவுல்லாஹ்வுக்கு

atha

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

முன்னாள் அமைச்சர் கௌரவ
அதாவுல்லாஹ் அவர்களுக்கு!


முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களுக்கு! நீங்கள் உங்கள் கட்சியான தேசிய காங்கிரஸை பலப்படுத்தும் வகையில் இன்று வடக்கு,கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரசாரங்களை மேற்கொள்கிறீர்கள். அதில் எந்த தப்பும் இல்லை. உங்கள் பணியைப் பாராட்டுகிறேன்.

அதேவேளை கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, ஆதரவாளர்களை அதிக எண்ணிக்கையில் உள்ளீர்த்தல் என்ற விடயத்தில் நீங்கள் தவறு விடுகிறீர்கள். இந்த விடயத்தில் கண்டது கடியது அனைத்தையும் நீங்கள் சாப்பிட்டு வயிற்றோட்ட வியாதிக்கு ஆளாகி விடாதீர்கள்.

இன்று உங்கள் கட்சிக்கு தேவைப்படுவது சமூகப் பற்றாளர்களே! இன்றைய எமது சமூகத்தின் நிலைமை தொடர்பில் ஒரு கணம் கூட சிந்திக்காத சிலர் இன்று உங்கள் கட்சியில் தானாக இணைந்து கொள்கிறார்கள் இவர்கள் விடயத்தில் நீங்கள் மிகக் கவனமாகச் செயற்படுங்கள்.

மேலும் இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் தேசியப் பிரச்சினை … சரி…சரி அதனை விடுங்கள் நமது மக்களின் உள்ளுர் பிரச்சினைகள் கூட என்னவென்று தெரியாத, அல்லது என்னவாக இருந்தால் எனக்கென்ன என்ற கொள்கையுடன் செயற்படும் சிலர் இன்று உங்கள் கட்சியில் வந்தேறு குடிகளாகியுள்ளனர்..

இந்த விடயத்தில் மிக்க அவனதாகச் செயற்படுங்கள். ஆட்கள் கூட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக மாக்களைச் சேர்ந்து தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.

– நன்றி அன்புடன் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Web Design by The Design Lanka