வரட்சி காலநிலையினால் நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவை வேகமாக அதிகரிப்பு. » Sri Lanka Muslim

வரட்சி காலநிலையினால் நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவை வேகமாக அதிகரிப்பு.

Contributors

தற்போது நிலவும் வரட்சி நிலைக்கு மத்தியில், நாட்டில் நாளாந்த மின்சாரத்திற்கான தேவை

அதிகரித்து வருவதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இருப்பினும், மின்சார விநியோகத் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று, மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.


பெப்ரவரி மாத ஆரம்பம் முதல் தற்போது வரை நாட்டின் மின்சாரத் தேவை அதிகரித்து வருகின்றது. அத்துடன், நாளாந்தம் பயன்படுத்தப்படும் மின்சார அதிகரிப்பையும் காணக் கூடியதாகவுள்ளது.

ஜனவரி மாத காலப்பகுதியில் பொதுமக்களின் மின்சாரத் தேவை, குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

இருபது (20%) சதவீத நீர்மின் உற்பத்தி மூலமும், எழுபது (70%) சதவீத அனல்மின் நிலை உற்பத்தி மூலமுமே, தற்போது நாட்டின் மின் தேவை நிறைவேற்றப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.( ஐ. ஏ. காதிர் கான் )

Web Design by The Design Lanka