வரவு செலவுக்கு எதிராக வாக்களித்த உள்ளூர் உறுப்பினர்களுக்கு ஆப்பு! - Sri Lanka Muslim

வரவு செலவுக்கு எதிராக வாக்களித்த உள்ளூர் உறுப்பினர்களுக்கு ஆப்பு!

Contributors

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 14ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

ஆளும் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் உப தலைவர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் கட்சிக்குள் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (அத தெரண )

Web Design by Srilanka Muslims Web Team