வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இயலாமை அம்பலமாகியுள்ளது; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு. - Sri Lanka Muslim

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இயலாமை அம்பலமாகியுள்ளது; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு.

Contributors

நேற்றைய தினம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம்
அரசாங்கத்தின் இயலாமை அம்பலமாகியுள்ளது என நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது .
2014 ம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டமானது மக்கள் மீது வரிச் சுமையை திணிக்கும் வகையில் அமைந்துள்ளது என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் .
மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இதுவல்ல . சாதாரண மக்களின் உணவுப் பொருட்கள் மீதும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது .
மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் நிறுத்தப்பட்ட ஓர் வரவு செலவுத் திட்டமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது . குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை .
தனியார்துறை ஊழியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை . இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இயலாமை அம்பலமாகியுள்ளது . வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வீழ்ச்சி வெளியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team