வரிப்பத்தான்சேனை மர்ஹும் சீனித் தம்பி ஹாஜியார் : என்றும் வாழும் ஓர் ஆளுமை. » Sri Lanka Muslim

வரிப்பத்தான்சேனை மர்ஹும் சீனித் தம்பி ஹாஜியார் : என்றும் வாழும் ஓர் ஆளுமை.

34134455_1860399957357638_8617231681851490304_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எல். நௌபீர்


மனிதன் ஒரு சமூக விலங்கு (social animal) அவன் கூடி வாழும் தன்மையையும், சமூக பிரக்ஞையையும் உள்ளுணர்வாகப் (internal feelings) கொண்டவனாகவே படைக்கப்பட்டுள்ளான். வரிப்பதான் சேனை இரண்டாம் பிரிவிலே வாழ்ந்து மரணித்த ஒரு மகத்தான ஜீவன் S. செய்யது அஹமட்சீனித் தம்பி ஹாஜியார் பற்றிய குறிப்பு இது. நீண்ட நாட்களாக அவரைப் பற்றி ஒரு பதிவை எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன் இப்போதே அது ஈடேறுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்.

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் சருவதேச அளவில் பெயர் எடுப்பதற்கான சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. என்றாலும் தான் வாழ்ந்த சூழலில், கிராம கலாசாரத்தில் (rural culture) ஒரு சில ஆளுமைகள் அழியாத தடம் பதித்தே மரணித்துப் போகின்றன. அந்த வகையில் வரிப்பத்தான் சேனை சீனித் தம்பி ஹாஜாயார் ஒரு மகத்தான மனிதனாகிறார். அவர் வாழ்ந்த சூழலின் பிராந்திய சமூக மேம்பாட்டுக்கான பல வேலைத் திட்டங்களைச் சிறப்பாக செய்து முடித்த வல்லவர்.

அவர் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், சமூக நிறுவனங்கள் என மக்களின் பண்பாடு அபிவிருத்தி்க்கென (behavior development) அரும் பாடுபடலானார். சில சமயம் பொது நிறுவனங்களுக்குத் தனது சொந்த நிலத்தைக் கூட வழங்க அவர் தயக்கம் காட்டியதில்லை.

பிராந்தியத்திலே நெல் விவசாயத்திலும், விவசாயத்துக்கு உதவும் உழவு இயந்திரம், காணி திருத்தும் (JCB) போன்ற இயந்திரங்களை வழங்குவதிலும் பலரின் நன்மதிப்பையும் வென்றார். தனது வாழ் நாளில் ஒரு போதுமே அவர் அரசாங்க உதவிகளை நாடியது கிடையாது. மரணிக்கும் வரை சுயமாக உழைத்தே வாழ்ந்து வந்தார். மற்றவரை ஒரு போதும் தொல்லைப் படுத்தியது கிடையாது. எப்போதும் பொதுவாக யோசிக்கும் ஒரு நல்ல உள்ளமாகவே இருந்தார்.

அல் -அமீன் வித்தியாலயம், அவரின் வீட்டுக்குப் பக்கத்திலே அமைந்துள்ள அல் -அஷ்ஹர் வித்தியாலயம், அன்நூர் பள்ளி வாசல் போன்றவற்றை உருவாக்கி செயற்படுத்துவதில் பெரும் பங்காற்றானார். மரணிக்கும் வரை வரிப்பத்தான் சேனை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் மேம்பாட்டுக்காகவும், அதைப் புதுப் பொலிவுடன் மீழமைக்கவும் அரும் பாடு பட்டார்.
உழைத்தார்.

காலம் யாரையும் சுவைக்காது இருப்பதில்லை. நேரம் வரும் போது நாம் எல்லோரும் செல்ல வேண்டிய அடுத்த இடத்தை அடைந்தே தீர வேண்டும். அதில் யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் நாம் வாழும் போது ஏற்படுத்தும் சமூக அதிர்வே நம்மை நேரான பாதைக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் சீனித் தம்பி ஹாஜியார் ஒரு மனதை வென்ற மாமனிதனாகிறார். ஒரு சமூகத்தை வெல்ல அரசியல் அதிகாரமும், பதவி, பட்டங்களும் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஹாஜாயார் ஒரு எதிர் மறையானார். எந்தப் பதவியோ பட்டமோ அவருக்கு இல்லாதிருந்தாலும், மனித நேயம் நிறையவே கொண்டிருந்தார். இவர் மக்களுக்கு இயலுமானதைச் செய்தார். இந்தப் பிராந்திய இளம் இளையோர் இவரை ஒரு முன்மாதிரியாகக் (legend) என்றுமே கொள்ளலாம்.

முழுப் பெரும் பிரதேச சபையையும், பிரதேச செயலகத்தையும் உடைய இறக்காமத்தின் ஒரு பகுதியான வரிப்பத்தான் சேனையிலே இவர் ஒரு போதும் பிரதேசத்தினால் மேலாழப்பட வில்லை (geological subjectivity) எல்லாமே நமது மண் என்பதில் தெளிவாக இருந்தார். இவர் ஒருபோதும் இறக்காமம் – வரிப்பத்தான் சேனை என்று வேண்டாத விடயங்களில் சண்டை செய்தவரில்லை. தனது இறுதி வாழ்வியலை அல்- குர்ஆன், அல்- ஹதீசை ஒட்டி வாழ பெரும் பகிரதப் பிரயத்தனம் செய்தார். தொழில் வாழ்க்கையிலே சிறிய மனிதனாகவும் மக்களோடு ஒரு பெரிய எண்ணத்தைக் கொண்டும் வாழ்ந்த பெருந் தகை இவர்.

வல்ல அள்ளாஹ் அன்னாரின் கபுரை விசாலமாக்க வேண்டும் என்றும், மேலான சுவர்க்கத்தையும் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

34134455_1860399957357638_8617231681851490304_n

Web Design by The Design Lanka