வருமானம் குறைந்த 30 குடும்பங்களுக்கு இலவசக் குழாய் நீர் இணைப்பு - Sri Lanka Muslim

வருமானம் குறைந்த 30 குடும்பங்களுக்கு இலவசக் குழாய் நீர் இணைப்பு

Contributors

-எஸ்.அஷ்ரப்கான்-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்தினூடாக பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை (21) மாலை சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

தேர்தல்  காலங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாகுக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘வாழ்வின் ஒளி’ வாழ்வாதார உதவிகள் வழங்கும்  செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச ரீதியாக மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி அவர்களின் வாழ்வை வளமாக்கும்பொருட்டு அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்நிமித்தம், ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் முதலாம் கட்டத்தின்போது கல்முனைக்குடிப் பிரதேசத்தில் வருமானம் குறைந்த  30 குடும்பங்களுக்கு இலவசக் குழாய் நீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  வருமானம் குறைந்த குடும்ப யுவதிகளின் வருமானத்தை அதகரிக்கும் பொருட்டு 9 குடும்கங்களைச் சேர்ந்த  யுவதிகளுக்கு 40 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்திரங்கள்; வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்போது, நிந்தவூர்  பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் அப்பிரதேச விவசாயிகளுக்கும் அவா;களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக இவ் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்ட வைபம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின்(சிடா-ஸ்ரீலங்கா) அனுசரணையுடனும் சமூக கல்வி உளவளத்துணைக்கான ஆய்வு நிறுவனத்தின்( செக்றோ -ஸ்ரீலங்கா) ஏற்பாட்டுடனும் “ஒருமைப்பாட்டினூடான அபிவிருத்தியின் மூலம் சமூகத்தின் வளமான வாழ்வுக்கு வலுவூட்டுவோம்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

இதன்போது பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், இலவச குடி நீர் இணைப்பு மற்றும் மின்பிறபாக்கி என்பன வழங்கி வைக்கப்படவுள்ளன.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா; சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கலந்துகொள்வார். கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி எம்.அப்துல் கப்பார் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் தேசிய நீர்; வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.எம்.முனவ்வர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சாய்ந்தமருது அலுவலகப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஏ.மஜீட் மற்றும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைiவர் அல்ஹாஜ் வை.எம். ஹனிபா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளதுடன் உயர் அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கொள்ளவுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team