வர்த்தகர்கள் குழுவொன்றிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் உள்ளது என்றால் அரசாங்கம் எதற்கு- ஐக்கிய மக்கள் சக்தி..! - Sri Lanka Muslim

வர்த்தகர்கள் குழுவொன்றிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் உள்ளது என்றால் அரசாங்கம் எதற்கு- ஐக்கிய மக்கள் சக்தி..!

Contributors

விலைகளை கட்டுப்படுத்த தவறியதால் அமைச்சரவை பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்கள் பொருளாதாரத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் அவர்கள் பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபூர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பால்மா கோதுமா சீமெந்து எரிவாயு போன்றவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் அகற்றியுள்ளது கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்கள் குழுவொன்றிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் உள்ளது என்றால் அரசாங்கம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் கடைகளில் பால்மாக்கள் கோதுமை மா உட்பட அத்தியாவசிய பொருட்கள் தாரளமாக கிடைக்கும் பதுக்கிவைத்திருந்த பொருட்களை அவர்கள் புதிய விலைகளிற்கு விற்பனை செய்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரை அரசாங்கம் ஏன் நியமித்தது என கேள்வி எழுப்பியுள்ள அவரின் அதிகாரத்தின் கீழ் ஏன் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் வர்த்தகர்கள் முன்னால் முழந்தாளிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team