வறட்சியான காலநிலை நீடித்தால் நீர்விநியோகம் தடைப்படலாம் - Sri Lanka Muslim

வறட்சியான காலநிலை நீடித்தால் நீர்விநியோகம் தடைப்படலாம்

Contributors

நாடளாவிய ரீதியாக வறட்சியான காலநிலை நீடித்தால் நீர்விநியோகம் தடைப்படலாமென்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் மட்டம் குறைந்துள்ளதால், நீரை குறைந்தளவில் பயன்படுத்துமாறு பாவனையாளர்களிடம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது களனி கங்கையிலும் களு கங்கையிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது. அத்துடன், கடல் நீர் ஆறுகளில் பாயக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆகையால், கடல் நீர் நுழைவதைத் தடுக்கும் வகையில் மணல் மூடைகள் இடப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.   இவ்வாறு மணல் மூடைகள் இடும் நடவடிக்கை அம்பத்தலே நீர் வடிகட்டும் அலகைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையானது தற்போது நாளொன்றுக்கு 1.6 மில்லியன் கன மீற்றர் நீரை 06 மில்லியன் பாவனையாளர்களுக்கு வழங்கிவருகின்றது. இதில்  கொழும்புப் பகுதிக்கு 550,000 கன மீற்றர் நீரும்  கொழும்பு நகருக்கு  300,000 கன மீற்றர் நீரும் விநியோகிக்கப்படுகின்றது. ™

Web Design by Srilanka Muslims Web Team