தவறுகளை கட்சியே பொறுப்பேற்க வேண்டும் : ஹஸன் அலி விசேட நேர்காணல் » Sri Lanka Muslim

தவறுகளை கட்சியே பொறுப்பேற்க வேண்டும் : ஹஸன் அலி விசேட நேர்காணல்

hasan ali

Contributors
author image

Editorial Team

நன்றி விடிவெள்ளி


வடக்கு – கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். அதுவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என தமிழ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ள நிலையில் முஸ்லிம் தரப்புகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இவ்விவகாரம் குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியை நேர்கண்டோம். அவர் இதன்போது தெரிவித்த கருத்துக்களை வாசகர்களுக்காக தருகிறோம்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை உள்­ள­டக்­கிய ஒரு புதிய அர­சியல் யாப்­பினை அமைக்கும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இன்­றைய சூழலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாடு பற்றி என்ன சொல்­கின்­றீர்கள்?

1978 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் நிர்­ணய சபை­யாக செயல்­பட்டு புதிய யாப்­பொன்றை அன்று முன்­வைத்­தது. 38 வரு­டங்­களின் பின்னர் தற்­போ­தைய பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் நிர்­ணய சபை­யாக இயங்கி மீண்டும் ஒரு புதிய யாப்பைத் தயா­ரிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது.

78 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட யாப்பில் சிறு­பான்மை மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்ட வர­லா­றுதான் பின்னர் பாரிய ஒரு இனப்­பி­ரச்­சினை யுத்­தத்­துக்­கான கள­மாக உரு­மாறி இந்­நாட்டை ரண­க­ள­மாக ஆக்­கி­ய­தென்­பது நாம் எல்­லோரும் அறிந்­த­தொன்­றாகும்.

அன்று விட்ட தவ­றுக்­காக பிரா­யச்­சித்தம் தேடு­வ­தற்கு தற்­போ­தைய அரசு முயற்­சிக்­கின்­றது. ஆனால் அமை­ய­வி­ருக்கும் யாப்பு ஒரு முழு­மை­யா­ன­தாக வடிவம் பெறுமா அல்­லது ஏற்­க­னவே உள்ள திருத்­தங்­களின் தொடர்­பு­க­ளாக அமை­யுமா என்ற விடயம் இன்னும் விவா­திக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­கங்கள் ஒரு முக்­கி­ய­மான திருப்பு முனையில் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது மட்டும் தெளி­வான உண்­மை­யாகும்.

இந்தத் திருப்பு முனையில் உங்­க­ளது பயணம் எவ்­வாறு அமையப் போகின்­றது?

எமது பயணம் தீர்­வைத்­தேடும் கட்­டத்தில் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதைப் பற்றி 1986 இல் எமது ஸ்தாபகத் தலைவர் வெளி­யிட்ட கட்­சியின் கொள்கைப் பிர­க­ட­னத்தில் தெளி­வாக தீர்க்க தரி­ச­ன­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தேசம் (கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை தேர்தல் தொகு­திகள்) என்­ப­தனை அடித்­த­ள­மாகக் கொண்டு அத­னுடன் மட்­டக்­க­ளப்பு, மன்னார், திரு­மலை, வன்னி, யாழ்ப்­பாணம் ஆகிய வடக்கு கிழக்கின் சகல மாவட்­டங்­க­ளிலும் உள்ள முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களை அடை­யாளம் கண்டு அவற்றை நிலத் தொடர்­பற்ற வகையில் இணைத்த ஒரு தனி மாகாண அமைப்பு வேண்டும் என்­ப­துதான் எமது உச்­சக்­கட்ட நிலைப்­பாடு.

இது பற்றி மறைந்த தலைவர் தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யு­டனும் ஏனைய கட்­சி­க­ளு­டனும் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யு­முள்ளார்.

அத­ன­டிப்­ப­டையில் சில உடன்­பா­டு­களும் அவ்­வப்­போது காணப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட ஆவ­ணங்­களும் உண்டு. இலங்­கையில் முஸ்­லிம்கள் ஒரு தனித் தேசி­ய­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கும் அவர்­க­ளது தனித்­துவ அடை­யாளம் சுய­நிர்­ணய உரிமை என்­பன பாது­காக்­கப்­படு­வ­தற்கும் ஏற்­ற­வ­கையில் அர­சியல் யாப்பில் வலு­வான மாற்­றங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

இதனை உறு­திப்­ப­டுத்திப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே எமது கட்சி தோற்­று­விக்­கப்­பட்­டது. அதற்­கா­கவே அன்­றைய போரா­ளிகள் சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்துக் கொண்டு ஜன­நா­யக ரீதி­யான போராட்­டத்தில் இறங்­கினர்.

தலைவர் அஷ்ரப் இந்த இலக்கை அடை­வ­தற்­கான பய­ணத்­தில்தான் தனது உயி­ரையும் இழந்தார். அவரைப் போன்று பல போரா­ளி­களும் தங்­க­ளது உயிர்­களைப் பலி கொடுத்­துள்­ளனர். உட­மைகள் இழந்து, இடம்­பெ­யர்ந்து இன்றும் இன்­னல்­களை சுமந்­த­வர்­க­ளாக உள்­ளனர்.

இத­னை­விடப் பன்­ம­டங்கு உயிர், உடமை இழப்­புக்­க­ளையும் இடம்­பெ­யர்­வு­க­ளையும் எமது சகோ­தர தமி­ழினம் சந்­தித்­துள்­ளது. என­வேதான் வடக்கு கிழக்கின் எதிர்­கா­லத்தை வள­மாக்கும் பணியில் இரு சமூ­கங்­களும் மனம் விட்டுப் பேசி ஒத்த கருத்­துக்கு வர­வேண்டும். இல்­லா­விட்டால் எமக்­கி­டையில் ஏற்­படும் அர்த்­த­மில்­லாத கருத்து வேறு­பா­டுகள் எல்லாம் தேவை­யற்ற பரி­மா­ணங்­களில் ஊதிப் பெரி­தாக்கி இரு­சமூ­கங்­க­ளையும் நிரந்­த­ர­மாகப் பிரித்து விடு­வ­தற்கு காத்துக் கொண்­டி­ருக்கும் சக்­திகள் தமது இலக்கை இலே­சாக அடைந்­து­விடும்

முஸ்­லிம்கள் தரப்­பி­லி­ருந்து பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக அறிய முடி­கின்­றது. இது பற்றி என்ன கூறு­கின்­றீர்கள்?சில முஸ்லிம் கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும் வடக்­குடன் கிழக்கு சேரக் கூடாது என்­ப­தையே அதி­க­மாக தங்­க­ளது உச்­ச­க்கட்ட எதிர்­பார்ப்­பாக கூறிக்­கொள்­வதை அண்­மைக்­கா­ல­மாக அவ­தா­னிக்க முடி­கின்­றது.

உண்­மையில் பெரும்­பான்மை சிங்­கள தேசி­ய­வா­தத்தின் உச்­ச­க்கட்ட எதிர்­பா­ர்ப்பும் இதுதான். அப்­ப­டி­யானால் சிங்­கள தேசி­ய­வா­தி­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு வலுச்­சேர்க்கும் கோஷத்திற்கு முஸ்­லிம்கள் முட்டுக் கொடுக்­கின்­றார்கள் என மூன்­றா­வது சமூகம் சந்­தே­கிக்க கூடிய ஒரு களம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதா எனவும் எண்ணத் தோன்­று­கி­றது.

சிங்­கள சமூ­கமும் முஸ்லிம் சமூ­கமும் ஒத்த கருத்தைக் கூறு­வதில் ஏட்­டிக்குப் போட்­டி­யாக நடந்து கொள்­வ­தற்­கான உண்­மை­யான காரணம் கடந்த 30 வரு­டங்­க­ளாக நடந்த கொடிய யுத்­தத்தின் போது ஆயு­த­தா­ரி­களின் அடா­வ­டித்­த­னத்தில் அவர்கள் அனு­ப­வித்த மறக்க முடி­யாத சம்­ப­வங்­க­ளே­யாகும்.

மீண்டும் ஒரு அச்­ச­சூழல் வந்து விடுமோ என்ற ஒரு தடவை பயம் அவர்­களை இன்றும் ஆட்டிப் படைப்­ப­துதான் கிழக்கு இணைப்பு விட­யத்தில் அவர்கள் வெளிப்­ப­டுத்தும் கடும்­போக்­காகும். போர் முடிந்து 7 வரு­டங்கள் முடிந்த பின்­னரும் போரின் பின்னர் ஆட்­சி­யி­லி­ருந்து கெடு­பிடி அரசு அகற்­றப்­பட்டு 1 வருடம் பூர்த்­தி­யான பின்­னரும் கூட அச்ச நிலை­யினை அவர்­களால் மறக்­க­மு­டி­ய­வில்லை.

இவர்­க­ளது அச்சம் நியா­ய­மா­ன­தாக இருந்­தாலும் ஒரு சமா­தா­னத்தை தேடும் பின்­ன­ணிக்கு இது பொருந்­தாது என்­பதே எனது அபிப்­பி­ரா­ய­மாகும். புதி­யதோர் சூழ­லையும் நாம் உரு­வாக்க வேண்டும். ஒவ்­வொரு தரப்­பி­னரும் தமது உச்­சக்­கட்ட எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்­தவும் வேண்டும்.

கிழக்கு வடக்­குடன் இணையக் கூடாது என்­பது அநே­க­மா­ன­வர்­களின் கருத்­தாக இருந்­தாலும் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதுதான் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான இறுதித் தீர்வாய் இருக்க முடி­யாது. எனவே இவர்கள் தமது எதிர்­பார்ப்­பு­க­ளையும் தெளி­வாக முன்­வைக்க வேண்டும்.

தற்­போது உள்ள கிழக்கு மாகாணம் 1948ல் சுதந்­திரம் கிடைத்த போது இருந்த எல்­லை­க­ளையும் இனப்­ப­ரம்­ப­லையும் கொண்­ட­தல்ல. அது எல்­லைகள் உரு­மாற்­றப்­பட்டு பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் தேவைக்­கேற்ப அவ்­வப்­போது மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட தொன்­றாகும். இன்­றைய கிழக்கின் மூன்றில் இரண்டு மாகா­ணங்­களில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக இருந்­து­வ­ரு­கின்ற போதிலும் மாவட்ட நிர்­வாக மையங்­களில் தமிழ் பேசும் ஒரு­வரை அரச அதி­ப­ராக நிய­மிக்க முடி­யாத இறுக்­க­மான நிலைமை மட்டும் தொடர்ந்தே வரு­கின்­றது.

இத்­த­னைக்கும் ஒவ்­வொரு ஆட்சி மாற்­றத்­தி­ன்­போதும் நமது வாக்­கு­களின் பங்­க­ளிப்பு முக்­கிய பாத்­தி­ரத்தை வகிக்­கத்­த­வ­று­வ­தே­யில்லை. நாம் அடக்கி ஆளப்­ப­டு­கின்றோம் என்ற எண்ணம் மட்டும் எம்­ம­னதில் பதி­யாத வண்ணம் நாம் கச்­சி­த­மாக மேய்க்­கப்­பட்டு வரு­கின்ற யதார்த்­தத்தை எப்­போ­துதான் புரிந்­து­கொள்­வோமோ தெரி­யாது.

1963ல் புதிய அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்ட போதும், 1986ல் புதிய உள்­ளூ­ராட்சி மன்ற சட்டம் கொண்டு வரப்­பட்ட போதும் திட்­ட­மிட்டு முஸ்லிம் பிர­தே­சங்கள் சிறிய பரப்­ப­ளவு நிலப்­பி­ர­தே­சங்­க­ளுக்குள் முடக்­கப்­பட்ட வர­லா­றுகள் உள்­ளன. அண்­மைக்­கால யுத்த பின்­ன­ணியின் போதும் முஸ்­லிம்­களின் நிலங்கள் திட்­ட­மிட்ட அரச நட­வ­டிக்­கை­களால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தன்­னிச்­சை­யாக புதிய வர்த்­த­மான அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்டு பல்­வேறு போலிக் கார­ணங்­களை முன்­வைத்து பறிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணி­யுள்ள கிழக்கை அப்­ப­டியே அங்­கீ­க­ரிப்­பது ஆபத்­தா­னது.

மேற்­கூ­றப்­பட்ட ஒவ்­வொரு திருப்­பங்­களின் போதும் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த நமது உறுப்­பி­ன­ர்கள் தங்­க­ளது எஜ­மா­னர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காகக் காத்த மௌனம் இன்று நமது தோள்­களில் சுமை­யாக இறங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான தவ­று­களை நாம் திருத்திக் கொள்­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்பம் இப்­போது கிடைத்­துள்­ளது. ஜனப்­ப­ரம்­ப­லுக்­கேற்ற நிலப்­பங்­கீ­டுகள் மீள மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டிய சட்­டங்கள் பற்றி நாம் வாதாட வேண்டும்.

இழந்த காணி­களை மீளப்­பெ­று­வ­தற்­கா­கவும், இனி விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்ள காணிகள் எவ்­வாறு பங்­கி­டப்­ப­ட­வேண்டும் என்ற கோட்­பாட்டை வரைபு செய்­வ­தற்­கா­க­வும் காணிகள் பறிக்­கப்­படும் நோக்­குடன் பிர­சு­ரிக்­கப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை வாபஸ் பெறச் செய்­வ­தற்­கா­கவும், முறை­யான எல்லை நிர்­ணய சபைகள் அமைக்­கப்­ப­டாமல் எம்­மீது திணிக்­கப்­பட்ட பொய்­யான பிர­தே­ச­சபை எல்­லை­களை மீள­மைப்­ப­தற்­கா­கவும் நாம் அணி­தி­ரண்டு போராட வேண்டும். அதற்­கான களங்கள் அமைக்­கப்­பட வேண்டும். அதை விடுத்து கிழக்கு இணைப்பைப் பற்றி மட்டும் வெறு­மனே பேசு­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது வாக்­குகளால் வெற்றி பெற்று நமது மண்ணில் நாமே ஆட்சி அமைக்க கூடிய ஒரு மாகா­ணத்தைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். நமது சக சகோ­த­ரர்கள் தமது இலக்கை மிகுந்த தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் ஆட்­சி­யா­ளர்­களின் பசப்பு வார்த்­தை­க­ளுக்கும் எலும்­புத்­துண்­டு­க­ளுக்கும் விலை போகாமல் வீரி­யத்­துடன் அடைந்­துள்­ளதைக் கண்டு பாடங்­களை கற்றுக் கொள்­வோ­மாக.

நிலத் தொடர்­பற்ற முறையில் நிர்­வாக எல்­லை­களை அமைப்­பது சாத்­தி­யமா? நடை­முறைச் சிக்­கல்கள் ஏற்­ப­டாதா?
இல்­லவே இல்லை. எல்லா நிர்­வா­கங்­களும் ஒரே நாட்டின் கூறு­கள்தான். ஒவ்­வொரு பிர­தே­சமும் தனித்­த­னி­யாக நிர்­வா­கங்­களை மேற்­பார்வை செய்து கொள்ளும் தன்­மையைக் கொண்­டி­ருக்கும். உலகின் பல பாகங்­களில் இவ்­வா­றான முறைமை வெற்­றி­க­ர­மாக இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. நமது அண்­டைய நாடா­கிய இந்­தி­யாவில் பாண்­டிச்­சேரி மாநில அரசு இவ்­வாறு அமைந்­துள்­ளது. 492 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ள­வையும், 82 லட்சம் சனத்­தொ­கை­யி­ன­ரையும், தமிழ், தெலுங்கு, மலை­யாளம், ஆங்­கிலம், பிரஞ்சு மொழி­களைப் பேசும் மக்­க­ளையும் கொண்ட இந்த மாநி­லத்தின் எல்­லைகள் நான்கு வெவ்­வேறு மாநிலங்­களில் அமைந்­துள்­ளன.
பாண்­டிச்­சேரி மாநிலம் என்­பது முன்னர் பிரான்சின் ஆதிக்­கத்தின் கீழ் இருந்த பகு­தி­க­ளாகும். பாண்­டிச்­சேரி, காரைக்கால், மாகே, யானம் ஆகிய பகு­திகள் தென் இந்­தி­யாவில் பரந்து காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொன்­றுக்கும் இடையில் உள்ள தூரம் சில நூறு கிலோ மீட்­டர்­க­ளாகும். அத­னோடு ஒத்­துப்­பார்க்­கையில் நமது பிர­தே­சங்கள் அனைத்தும் ஒரு சில மணித்­தி­யா­லங்­களில் அடையக் கூடி­ய­ன­வா­கவே இருக்கும். எனவே நிலத்­தொடர்­பற்ற மாநி­லங்கள் ஒன்­றாக நிர்­வா­க ­ரீ­தி­யாக இயங்­கு­வதில் எவ்­வித சிக்­கலும் இருக்­க­மாட்­டாது.

உங்­க­ளது எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வே­றாத நிலைமை ஏற்­பட்டால்…
இது முக்­கி­ய­மான ஒரு கேள்­வி­யாகும். எதிர்­பார்ப்­புக்கள் கிடைக்­காது போனால், அதற்­கான அனைத்துத் தவ­று­க­ளையும் கட்­சியே பொறுப்­பேற்க வேண்டும். நமது இலக்­கு­களை அடை­வ­தற்­கான பயணம் பிழை­யாக வழி நடத்­தப்­பட்­ட­துதான் அதற்­கான முக்­கிய கார­ணி­யாகும்.

எமது இலக்­குகள் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட போதே தீர்­மா­னிக்­கப்­பட்­ட­வை­யாகும். இடையில் புகுத்­தப்­பட்­ட­தல்ல.

ஒவ்­வொரு தேர்தல்களின் போதும் முக்கியமான அரசியல் நகர்வுகளின்போதும், மாநாடுகளின் போதும் பேச்சு வார்த்தைகளின் போதும், தெட்டத் தெளிவாக நமது இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒப்­பந்­தங்­க­ளா­கவும், தீர்­மா­னங்­க­ளா­கவும், ஆலோ­ச­னை­க­ளா­கவும் நமது இலக்­குகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் அந்த இலக்கை அடை­வ­தற்­கான புனி­த­மான பயணம் முறை­யாக வழி நடத்­தப்­பட்­டி­ருந்தால் நிச்­ச­ய­மாக நாம் திருப்­தி­யான முடிவை எட்­டு­வதில் எவ்­வித சிர­மமும் இருக்கமு­டி­யாது. தொடந்­தேர்ச்­சி­யாக அர­சாங்­கங்­களில் அமைச்சுப் பத­வி­களை அனு­ப­வித்­து­வந்த நமது பயணம் சோத­னைக்­குட்­ப­டுத்­த­ப­ட­வேண்­டிய தவிர்க்க முடி­யாத கட்­டத்தை அடை­கின்­றது.

தேடி­வந்த பத­வி­க­ளை­யெல்லாம் தியாகம் செய்து தனது சொந்தக் காலில் நின்று கொண்ட நமது சகோ­தர சமூகம் உச்­சத்தை நோக்கி வெகு­வாக முன்­னே­றிக்­கொண்­டி­ருக்­கையில் நாம் எங்கே போய்க் கொண்­டி­ருக்­கின்றோம் என்­பது வெகு விரைவில் வெளிப்­பட்­டு­விடும்.

பாதை­களை மாற்­று­வ­தற்குப் பதி­லாக பாத­ணி­களை மட்டும் மாற்றிக் கொள்ளும் நமது பழக்­கங்­களை விட்டு வெளி­யேறி புதிய தலை­மு­றை­க­ளுக்கு இடம் கொடுக்க நாம் தயா­ராக வேண்டும். உடம்பைப் பரா­ம­ரிப்­பதை விட்டு உடைகளில் மட்டும் கவனம் செலுத்தும் மேனி மினுக்கல் ஒரு விடுதலை போராட்டத்துக்கு விமோசனம் தராது.

Web Design by The Design Lanka