வலது குறைந்தோரின் சுயதொழிலுக்கு அரச உதவியைப் பெற்றுக் கொடுக்க கல்முனை முதல்வர் உறுதி - Sri Lanka Muslim

வலது குறைந்தோரின் சுயதொழிலுக்கு அரச உதவியைப் பெற்றுக் கொடுக்க கல்முனை முதல்வர் உறுதி

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கப் பிரதிநிதிகள் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து தமது தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கல்முனையில் அமைந்துள்ள முதல்வரின் பிரத்தியேக அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.மீரா முஹைதீன், பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.அஷ்ரப், செயலாளர் ஏ.எம்.அமீர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு கல்முனைப் பிராந்தியத்தை சேர்ந்த வலது குறைந்தோர் எதிர்நோக்கி வருகின்ற  பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதாரத் தேவைகள் குறித்து முதல்வரிடம் விபரித்துக் கூறினார்.

 

கல்முனைப் பிராந்தியத்தில் 109 வலது குறைந்தோர் வாழ்ந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டிய சங்கப் பிரதிநிதிகள், இவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளுக்காக அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுத் தருவதற்கும் இவர்களது வாழ்வாதாரத்திற்காக மாதாந்தம் வழங்கப்படுகின்ற மூவாயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு இதன்போது முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

 

கல்முனைப் பிராந்தியத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற வலது குறைந்தோருக்கு அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை தான் உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் உதவியப் பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பதாக உறுதியளித்தார்.

 

குறிப்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் இக்கோரிக்கையை முன்வைத்து உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு தான் முயற்சிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

 

handicapt1

 

handicapt1.jpg2

Web Design by Srilanka Muslims Web Team