வலிகள் சுமந்த மரணங்கள் » Sri Lanka Muslim

வலிகள் சுமந்த மரணங்கள்

pen

Contributors
author image

A.S.M. Javid

வக்கிரக் காரர்களின்

இதயமற்ற வெறித்தனங்களால்

அலொப்போ உயிர்கள்

வலிகள் சுமந்த மரணங்களாகின்றன.

பிஞ்சு உயிர்களை குண்டுகளால் வருடி

சிதைத்து புதைகுழிக்கு இரையாக்கும்

நயவஞ்சக விரோதிகளே- சிந்தியுங்கள்.

நீங்களும் மனிதர்கள்ததானா என்று.

குண்டுச் சத்தத்தால் இதயம் படபடக்க

அச்சத்தால் கண்கள் பிதுபிதுங்கிக்

கொண்டிருக்கையில் கோரக் குண்டுகள்

உயிர்களை அநியாயமாக சூறையாடுகின்றனவே.

குண்டுகளால் பதம் பார்க்கப்பட்ட

அலப்போவின் மரண அவலம்

எம்மை ஆவேசத்துடன்

கிளிகொள்ளச் செய்கின்றனவே.

அவர்களின் இரத் ஆறுகளும்

மரண ஓலங்களும்

எம்மை அதிர வைத்து எம்

உயிர்களையும் மௌனிகளாக்குகின்றனவே.

உயிர்ப் பிச்சை தரமாட்டார்களா?

என்று ஏங்கித் தவிக்கும் அப்பாவி

அலப்போவின் உறவுகளே

கொலை செய்யப்படவா பிறந்தீர்கள்?

நாசகார சக்திகளால்

சூறையாடப்படும் உறவுகளே

அலப்போவின் இதயங்களே

நீங்கள் சுவர்க்க வாதிகள்தான்

உங்கள் மரண ஓலங்களைக் கண்டு

அலறியடித்து கதறுகின்றோம்

உதவ முடியவில்லையே

இறைவா அவர்களைக் காப்பாறு.

ஆவேசங்களுக்கும் ஆதங்கங்களுக்கும்

அளவேயில்லை உங்களுக்காக.

மனிதமும், மனிதாபிமானமும்

அற்றவர்கள் இந்தக் கயவர்கள்தான்.

இரத்தத்தால் கூறுபோட்டு குண்டுகளால்

பிஞ்சுப் பாலகர்களின் உயிர் குடிக்கும்

மூர்க்கத்தனமானவர்களே உங்களுக்கு

இறைவனின் தண்டனை நிச்சயம்தான்.

கற்பிணிகள், வயோதிபர்கள் என்றும்

பாராது துப்பாக்கிகளால் காட்டும்

வெறித்தனங்களுக்கு இறைவனின்

சாபம்தான் நிச்சயம் கிட்டும்.

அப்பாவி உள்ளங்களே குண்டுகளால்

பதம் பார்க்கப்பட்டு சிதறிய உயிரற்ற

ஆயிரக் கணக்கான உடல்களைக் கண்டு

எம் இதயம் வெடிக்கின்றதே

உங்கள் மயான அவலம் கண்டு

கண்ணீர் வராத நாட்கள் இல்லை.

கோழைத்தனமான விரோதிகளின்

கொடூரங்களுக்கு காலம் பதில் சொல்லும்.

உலக ஆசைகளுக்காக

மனித உயிர்கள் மீது

துப்பாக்கி றவைகளுக்கு தீனிபோடும்

நாசிச சக்திககளே மனிதாபிமானம் எங்கே?.

சுயகௌரவத்திற்காய் மனிதாபிமானத்தை

துண்டாடும்; நயவஞ்சகர்களே

காமுகர்களே உங்கள் காம வெறி;க்கு

பிஞ்சுக் குழந்தைகளா பலிக்கடாக்கள்.

பூப்பெய்யாப் பிஞ்சுகளின்

கற்புக்களைக்கூட சூறையாடி

மதுவைப் குடிப்பதுபோல்

குதறித் துவம்சம் செய்யும் காமுகர்களே.

வரம்பு மீறும் உங்கள்

ஆணவத்திற்கும், அநியாயத்திற்கும்

பாத்திரவாளிகளான உங்களுக்கு

தண்டனை இல்லையென்று கனவு காணாதீர்கள்.

நீங்கள் பலியெடுக்கும்

ஒவ்வொரு அப்பாவி

உயிர்களினதும் ஆத்மாக்கள்

உங்களின் சாபக் கேட்டிற்கு ஆதாரங்களே.

மரணத்தைச் சுவைத்த பிஞ்சுகளே

உங்கள் அவலத்திற்கு எமது

கண்ணீரை மட்டுமே

காணிக்கையாக்க வேண்டியுள்ளது.

கொடியவர்களின் பஞ்சமா பாதகங்களை

கண்டு ஆனந்தம் அடையும்

முஸ்லிம் உலகமே இதுவா இஸ்லாம்?

இதுவா உத்தம நபியின் போதைனைகள்?.

பணபலமும், ஆள்பலமும் இருந்தும்

அழியும் இஸ்லாத்தை

காப்பாற்ற நாதியற்ற நீங்களும்

கலிமாச் சொன்ன முஸ்லிம்களா?.

ஏகாதிபத்தியத்திற்கு சலாம் போட்டு

முஸ்லிம்களை கொலை செய்யத் துணைபோகும்

துரோகிகளே நீங்களும் முஸ்லிம்களா?.

சொல்லவே நெஞ்சு கூசுகின்றது.

இஸ்லாமியர்கள் என்று மார் தட்டும்

எருமைக் கலாச்சாம் பிடித்த

முஸ்லிம் நாடுகளே, அறபிகளே

சற்றுச் சிந்தியுங்கள் உறவுகளையும்.

அநியாயத்திற்கு துணைபோன துரோகிகளே

என்றோ ஒரு நாள் நீங்களும்

இறைவனிடம் பதில் சொல்ல

வேண்டும் என்பதை மறக்கவும் வேண்டாம்.

பூண்டோடு கொலை செய்யப்படும்

கலிமாச் சொன்ன எம் இதயங்களின்

உயிர்களுக்காக நாம் ஒவ்வொரு விநாடியும்

அல்லாஹ்விடம் இரஞ்சி துஆச் செய்வோம்.

Web Design by The Design Lanka