வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி - Sri Lanka Muslim

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

Contributors

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நகர சபை தலைவர் என்.அனந்தராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 2 உறுப்பினர்களும் எதிராக 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதேவேளை, இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும் ஏற்கனவே ஒரு வாக்குகளினால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ™

Web Design by Srilanka Muslims Web Team