வளையும் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்துகிறது எல் ஜி நிறுவனம்! - Sri Lanka Muslim

வளையும் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்துகிறது எல் ஜி நிறுவனம்!

Contributors

LG-introduces-worlds-first-flexible-OLED-panel-for-smartphones

வளையும் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன் (Smart Phone)-களை அறிமுகப்படுத்த இருப்பதாக எல் ஜி (LG) நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் வளையும் திறன் கொண்ட தொடுதிரைகளை அறிமுகப்படுத்துவதாக கூறும் எல் ஜி (LG), அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் (Smart Phone)-னானது மேலிருந்து கீழாக வளையும் எனவும் உடையாது எனவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ள ஸ்மார்ட் ஃபோன் (Smart Phone)-களிலேயே குறைந்த எடையாக 7 புள்ளி 2 கிராம் அளவு மட்டுமே எடை கொண்டதாக இந்த ஸ்மார்ட் ஃபோன் (Smart Phone) இருக்கும் என தெரிகிறது. முன்னதாக சாம்சங் (Samsung) நிறுவனமும் வளையும் தன்மை கொண்ட போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தது.

Web Design by Srilanka Muslims Web Team