வவுனியாவில் புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - Sri Lanka Muslim

வவுனியாவில் புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Contributors

வவுனியா எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில்
சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது .
எட்டம்பகஸ்கட செத்செவன என்ற சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையினரால் செய்யப்பட்ட ஒரு முறைப்பாட்டையடுத்து , விசாரணைகளை நடத்தி வந்த பொலிசார் , செவ்வாய்க்கிழமை சந்தேக நபராகிய கல்யாண திஸ்ஸ தேரர் என்ற மதகுருவைக் கைது செய்திருந்தனர் .
இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொலிசார் , இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவித்து , இவரை இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர் .
இந்த வழக்கு தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்த வவுனியா மாவட்ட நீதவான் வி . இராமகமலன் , சந்தேக நபராகிய மதகுருவை வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் .
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்து , எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் இருந்த 6 சிறுவர்களை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர் . ஏற்கனவே , இவர்களில் இருவர் தொடர்பாக பொலிசாருக்கு முறையிடப்பட்டிருந்தது , அத்துடன் பொலிசாரின் விசாணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்ட மேலும் 4 சிறுவர்களும் இவர்களில் அடங்குவார்கள் .

Web Design by Srilanka Muslims Web Team